குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 138

மருதம் - தோழி கூற்று


மருதம் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

முதல் நாள் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து தலைவியைக் காணாத தலைவன், மறுநாள் அருகில் நிற்பதை அறிந்த தோழி உரைத்தது. இரவுக்குறி நேர்ந்ததூஉமாம்.

கொன்னூர் துஞ்சினும் யாந் துஞ்சலமே,
எம் இல் அயலது, ஏழில் உம்பர்
மயிலடி இலைய மா குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே . . . . [05]
- கொல்லன் அழிசி.

பொருளுரை:

பெரிய ஊரில் உள்ளவர்கள் தூங்கி விட்டார்கள். ஆனால் நாங்கள் தூங்கவில்லை. எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள உயர்ந்த ஏழில் குன்றத்தின் அருகில் உள்ள, மயிலின் கால்களைப் போன்ற இலைகளையுடைய நொச்சி மரத்தின் பெரிய கொத்துகளாக உள்ள, நீலமணியின் நிறத்தை ஒத்த மலர்கள், மென்மையான கிளைகளில் இருந்து உதிர்வதைக் கேட்டபடியே படுத்திருந்தோம்.

குறிப்பு:

துஞ்சலமே - ஏகாரம் அசை நிலை. கேட்டே - ஏகாரம் அசைநிலை. கொன் ஊர் (1) - உ. வே. சாமிநாதையர் உரை - பெரிய ஊர், அலரால் தலைவியை அஞ்சுவித்தலின் அச்சம் தரும் ஊருமாம். ஏழில் (2) - உ. வே. சாமிநாதையர் உரை - ஏழிற் குன்றம், ஏழிலைப் பாலை மரமுமாம், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - எழில் என்பதன் நீட்டல். மயிலடி அன்ன இலை - நற்றிணை 305 - மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும், நற்றிணை 115 - மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி, குறுந்தொகை 138 - மயில் அடி இலைய மா குரல் நொச்சி. கலித்தொகை 46 - குரல் நொச்சிப் பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக.

சொற்பொருள்:

கொன் ஊர் - பெரிய ஊர் (உ. வே. சா. - கொன் என்னும் இடைச் சொல் பெருமை என்னும் பொருளில் வந்தது), அலரால் தலைவியை அஞ்சுவித்தலின் அச்சமுமாம், துஞ்சினும் - தூங்கினாலும், யாம் துஞ்சலமே - நாங்கள் தூங்கவில்லை, எம் இல் அயலது - எங்கள் வீட்டிற்கு அருகில், ஏழில் உம்பர் - உயர்ந்த ஏழில் மலையில், மயிலடி இலைய - மயிலின் கால்களைப் போன்ற இலைகளை உடைய, மா குரல் - கருமையான அல்லது பெரிய குலைகள், நொச்சி - நொச்சி - Chaste Tree Flowers, அணி மிகு - மிகவும் அழகான, மென் கொம்பு - மெல்லிய கிளைகள், ஊழ்த்த - உதிர்த்த, மணி மருள் - நீலமணியைப் போன்ற, பூவின் - பூக்கள், பாடு நனி கேட்டே - விழுவதை கேட்டவாறு