குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 315

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

"தலைவன் வரைவிடை வைத்துப் பிரியுங்காலத்தில் ஆற்றும் ஆற்றல் உடையையோ?" என்று வினவிய தோழிக்கு, "அவனது விருப்பப்படியே ஒழுகும் தன்மையினேனாதலின் ஆற்றுவேன்" என்று தலைவி கூறியது.

எழுதரு மதியம் கடல் கண்டாஅங்கு
ஒழுகு வெள் அருவி ஓங்கு மலைநாடன்
ஞாயிறு அனையன் - தோழி!
நெருஞ்சி அனைய என் பெரும் பணைத்தோளே.
- மதுரை வேள்ஆதத்தனார்.

பொருளுரை:

தோழி! எழுகின்ற நிலவின் உருவம் கடலில் காணப்பட்டாற் போல் தோன்றும் வடியும் வெள்ளை அருவிகளையுடைய உயர்ந்த மலைநாட்டையுடைய தலைவன், கதிரவனைப் போன்றவன். என் பெரிய மூங்கிலைப் போன்ற தோள்கள், நெருஞ்சி மலர்களைப் போன்றன.

முடிபு:

தோழி, மலைநாடன் ஞாயிறனையன்; என் தோள் நெருஞ்சியனைய.

கருத்து:

தலைவன் கருதுவதையே யானும் கருதி ஆற்றியிருப்பேன்.

குறிப்பு:

பணைத்தோளே: ஏகாரம் அசை நிலை. பொ. வே. சோமசுந்தரனார் உரை - நெருஞ்சி மலர் ஞாயிற்றின் ஒளியில் ஈடுபட்டு அதன் இயக்கத்தோடு ஒத்துத் திரும்புதல் போன்று, யானும் தலைவானது அன்பில் ஈடுபட்டு அவன் செயலோடு ஒத்து இயக்குவேன் ஆகலின் ஆற்றியிருப்பேன் என்றவாறு. நெருஞ்சி ஞாயிற்றை நோக்கி நிற்றல் - அகநானூறு 336 - சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல, புறநானூறு 155 - நெருஞ்சிப் பசலை வான் பூ ஏர்தரு சுடரின் எதிர் கொண்டாஅங்கு. உ. வே. சாமிநாதையர் உரை - அருவிக்குப் பிறையும் கடலுக்கு மலையும் உவமைகள்.

சொற்பொருள்:

எழுதரு மதியம் - எழும் நிலவை, கடல் கண்டாங்கு - கடலில் கண்டதைப் போல், ஒழுகு வெள்ளருவி - வடியும் வெள்ளை அருவிகள், ஓங்குமலை - உயர்ந்த மலையின், நாடன் - தலைவன், ஞாயிறு அனையன் தோழி - கதிரவனைப் போன்றவன் தோழி, நெருஞ்சி அனைய - நெருஞ்சியைப் போன்றன, என் பெரும் பணைத்தோளே - என் பெரிய மூங்கில் போன்ற தோள்கள்