குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 107

மருதம் - தலைவி கூற்று


மருதம் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

பொருள்வயிற் பிரிந்த தலைவன் மீண்டு வரப்பெற்று அவனோடு இன்புற்ற தலைவி பொழுது புலர்ந்தமையால் துயருற்று, “எம்மைத் துயிலினின்றும் எழுப்பிய சேவலே! நீ இறந்து படுவாயாக” என்று கூறித் தன் காமமிகுதியைப் புலப்படுத்தியது.

குவி இணர்த் தோன்றி ஒண் பூ அன்ன
தொகு செந்நெற்றிக் கணங் கொள் சேவல்!
நள் இருள் யாமத்தில் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்கு இரை ஆகிக்
கடு நவைப் படீஇயரோ நீயே, நெடு நீர் . . . . [05]

யாணர் ஊரன் தன்னொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே.
- மதுரைக் கண்ணனார்.

பொருளுரை:

குவிந்த, கொத்தான காந்தள் மலரைப் போன்ற சிவப்பு கொண்டையை உடைய, கூட்டத்தோடு வாழும் சேவலே! ஆழமான நீரை உடைய பணம் மிகுந்த ஊரினனோடு நான் மிக இனிய துயிலில் இருந்தப் பொழுது, நீ என்னை எழுப்பி விட்டாய். இருண்ட இரவில், எலியைத் தேடும் இளம் காட்டுப் பூனை, கொஞ்சம் கொஞ்சமாக உண்ணும் உணவாக ஆகி, நீ மிகுந்த துன்பத்தை அடைவாயாக!

குறிப்பு:

படீஇயரோ - ஓகாரம் அசை நிலை, நீயே - ஏகாரம் அசை நிலை, எடுப்பியோயே - ஓகாரம் அசை நிலை. அகநானூறு 145-14 கடு நவைப் படீஇயர். நெடு நீர் (5) - உ. வே. சாமிநாதையர் உரை - ஆழமாகிய நீர், தமிழண்ணல் உரை - ஆழமான நீர் நிலை, பொ. வே. சோமசுந்தரனார் உரை - செய்ய வேண்டியதொன்றனை அங்ஙனம் செய்யாது கால நீட்டிருத்தற் பண்பு, இரா. இராகவையங்கார் உரை - நெடுங்கால தாமதம். ஏம இன் துயில் (7) - உ. வே. சாமிநாதையர் உரை - இன்பத்தைத் தரும் இனிய துயில், பொ. வே. சோமசுந்தரனார் உரை - மிக இனிய துயில், இரா. இராகவையங்கார் உரை - இன்பத்திற்குக் காரணமான இனிய துயில். யாணர் - புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

சொற்பொருள்:

குவி இணர் - குவிந்த கொத்து, தோன்றி - காந்தள், malabar glory lily, ஒண் பூ - ஒளியுடைய மலர், அன்ன - போன்று, தொகு - முழுக்க, செந்நெற்றி - கொண்டை (நெற்றி - ஆகுபெயர் சேவலின் கொண்டைக்கு), கணங்கொள் சேவல் - கூட்டத்துடன் இருக்கும் சேவலே, நள்ளிருள் யாமத்தில் - இருண்ட இரவில், எலி பார்க்கும் - எலியைத் தேடும், பிள்ளை வெருகிற்கு - இளம் காட்டுப் பூனைக்கு, அல்கு இரை ஆகி - வைத்து உண்ணும் இரை ஆகி, கடு நவை - மிகவும் துன்பம், படீஇயரோ - அடைவாயாக (சொல்லிசை அளபெடை, வியங்கோள் வினைமுற்று விகுதி), இகழ்ச்சிப்பொருளில் வந்தது, நீயே - நீயே, நெடு நீர் - ஆழமான நீர், யாணர் - புது வருமானம், ஊரன் - ஊரினன், தன்னொடு வதிந்த - அவனோடு இருக்கும் பொழுது, ஏம இன் துயில் - மிக இனிய துயில், எடுப்பியோயே - எழுப்பி விட்டாயே