குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 257

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

வரைவுணர்த்திய தோழியை நோக்கி, "தலைவனைக் கண்ட போது இன்பமும் அவனைக் காணாத போது துன்பமும் உடையேனாக இருந்தேன். இனி எப்பொழுதும் உடனுறைதலால் இன்பமே உண்டாகும்" என்பது படத்தலைவி கூறியது.

வேரும் முதலும் கோடும் ஓராங்குத்
தொடுத்த போலத் தூங்குபு தொடரிக்
கீழ் தாழ்வு அன்ன வீழ் கோட் பலவின்
ஆர்கலி வெற்பன் வருதொறும், வரூஉம்;
அகலினும் அகலாதாகி . . . . [05]

இகலும் - தோழி! - நம் காமத்துப் பகையே.
- உறையூர்ச் சிறுகந்தனார்.

பொருளுரை:

தோழி! நம்மிடத்து உள்ள காமமாகிய பகை வேரிலும் அடிமரத்திலும் கிளையிலும் ஒரு படியாக தொடுத்து வைத்தன போல தொங்கித் தொடர்ந்து கீழே தாழ்ந்தாற் போன்ற தணிந்த குலைகளை உடைய பலா மரத்தினை உடைய ஆரவாரத்தை உடைய மலைக்குத் தலைவன் இங்கே வருந்தோறும் வெளிப்படும்; அவன் அகன்றாலும் போகாததாகி மாறுபடும்; இஃது என்ன வியப்பு!

முடிபு:

தோழி, காமத்துப் பகை, வெற்பன் வருதொறும் வரூஉம்; அகலினும் இகலும்.

கருத்து:

தலைவனைப் பிரிதலின்றி ஒன்றியிருத்தலே எனக்கு இன்பம் பயப்பது.