குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 005

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

பிரிவு ஆற்றாமையால் தலைவி வருந்துதலை அறிந்து கவலையுற்ற தோழிக்கு, தலைவி தன் கண்கள் துயிலாமையை உணர்த்தும் வாயிலாகக் காமநோயின் கொடுமையைக் கூறியது.

அது கொல் தோழி காம நோயே,
வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை
உடை திரைத் திவலை அரும்பும் தீ நீர்
மெல்லம்புலம்பன் பிரிந்தெனப்,
பல்லிதழ் உண்கண் பாடு ஒல்லாவே?
- நரிவெரூ உத்தலையார்.

பொருளுரை:

தோழி! தன்னிடத்தில் தங்கும் குருகுகள் உறங்குவதற்குக் காரணமான இனிய நிழலை உடைய புன்னை மரம் உடையும் கடல் அலைகளின் நீர்த் திவலையால் அரும்பும் மெல்லிய கடற்கரைத் தலைவன் என்னை விட்டுப் பிரிந்ததால், பல இதழுடைய தாமரை மலரைப்போன்ற தோற்றத்தையுடைய, கண்மை இட்ட எனது கண்கள் தூங்க முடியாதவையாக ஆகி விட்டன. இது தான் காதல் நோயின் தன்மையோ?

குறிப்பு:

இரா. இராகவையங்கார் உரை - கடலன்ன செல்வத்தால் பொலிவு பெறும் மனைக் கண்ணே வரையாது இனிது உறங்குகின்றான் என்பது. பிரிந்தென (4) - உ. வே. சாமிநாதையர் உரை - தலைவன் பிரிவினால், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - பிரிந்தான் என்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை - தம்மகத்தே பிரியாது இருப்பவும் அஃது அறியாது பிரிந்துபோயினனாகக் கருதி.

சொற்பொருள்:

அது கொல் தோழி - இந்தத் தன்மை உடையது தானா, காம நோயே - காதல் நோய் (ஏ - அசை நிலை), வதி குருகு - வாழும் குருகுகள், உறங்கும் - தூங்கும், இன் நிழல் - இனிய நிழல், புன்னை - புன்னை மரம், நாகம், உடை திரை - உடைக்கும் அலைகள், திவலை - நீர்த் திவலை, அரும்பும் - மலரச் செய்யும், தீ - இனிய, நீர் - கடல் நீர், மெல்லம்புலம்பன் - கடற்கரையின் தலைவன் (அம் - சாரியை, புலம்பு = கடற்கரை, நெய்தல் நிலம்), நெய்தல் நிலத்தின் தலைவன், பிரிந்தென - பிரிந்ததால், பல்லிதழ் - பல இதழ்களையுடைய தாமரை மலர் (பூவிற்கு ஆகுபெயர், அகரம் கெட்டு ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ - தொல்காப்பியம், எழுத்து 160, என்றதனால் லகரம் இரட்டித்து பல்லிதழ் என முடிந்தது), உண்கண் - மை உண்ட கண்கள், பாடு ஒல்லாவே - தூங்க இயலாது