குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 306

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

காப்பு மிகுதியால் வருந்திய தலைவி, வரையாது வந்தொழுகும் தலைவனிடத்துச் சிறிது வேறுபாடுடையளாகியும் அவ்வேறுபாடு அவனைக் கண்டக்கால் மறைவதைத் தன் நெஞ்சை நோக்கிக் கூறுவாளாய்க் கூறியது.

"மெல்லிய, இனிய, மேவரு தகுந,
இவை மொழியாம்" எனச் சொல்லினும், அவை நீ,
மறத்தியோ வாழி - என் நெஞ்சே! - பல உடன்
காமர் மாஅத்துத் தாது அமர் பூவின்
வண்டு வீழ்பு அயரும் கானல் . . . . [05]

தெண் கடல் சேர்ப்பனைக் கண்ட பின்னே?
- அம்மூவனார்.

பொருளுரை:

என் நெஞ்சே! மென்மையான இனிமையான விருப்பத்தக்கனவும் ஆக உள்ள சொற்களைப் பேச வேண்டாம் என்று நான் உனக்குச் சொன்னாலும், அழகிய மரத்தின் தாதுகளை உடைய மலர்களில் வண்டுகள் வீழும் சோலையையுடைய குளிர்ச்சியான கடலின் கரையின் தலைவனைக் கண்டவுடன் நான் கூறியவற்றை மறந்து விடுகின்றாயா?

முடிபு:

நெஞ்சே, மொழியாமெனச் சொல்லினும் சேர்ப்பனைக் கண்டபின், நீ அவை மறத்தியோ?

கருத்து:

தலைவனைக் காணின் எல்லாத் துன்பங்களையும் மறந்துவிடுகின்றேன்.

குறிப்பு:

பின்னே - ஏகாரம் அசை நிலை. பொ. வே. சோமசுந்தரனார் உரை - மா அத்துத் தாது அமர் பூவில் வண்டு வீழ்ந்து ஆண்டுப்படும் கள்ளுண்டு மயங்கினாற் போன்று நீயும் தலைவனைக் கண்டுழி மயங்கா நின்றனை (மயங்கி நின்றனை) என்பது குறிப்பாகக் கொள்க.

சொற்பொருள்:

மெல்லிய - மென்மையாக, இனிய - இனிமையாக, மேவரு தகுந - விருப்பத்தக்கனவும் ஆக, இவை மொழியாம் எனச் சொல்லினும் - நான் இவ்வாறு பேச வேண்டாம் சொன்னாலும், அவை நீ மறத்தியோ - அவற்றை நீ மறந்து விடுகின்றாயா, வாழி - அசை நிலை, என் நெஞ்சே - என்னுடைய நெஞ்சே, பலவுடன் காமர் மாஅத்து - அழகிய மாமரத்தின், தாது அமர் பூவின் - காதுகள் பொருந்திய மலரிடத்து, வண்டு - வண்டுகள், வீழ் அயரும் - வீழ்தலைச் செய்யும், கானல் - கடற்கரைச் சோலை, தண் கடல் - குளிர்ச்சியான கடல், சேர்ப்பனைக் கண்ட பின்னே - நெய்தல் நிலத்தின் தலைவனை கண்ட பின்