குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 270

முல்லை - தலைவன் கூற்று


முல்லை - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

வினைமுற்றி மீண்டு தலைவியோடு இன்புற்ற தலைமகன் மழையைநோக்கி, "நீ நன்றாகப் பெய்வாயாக!" என வாழ்த்தியது.

தாழ்இருள் துமிய மின்னி, தண்ணென
வீழ் உறை இனிய சிதறி, ஊழின்
கடிப்பு இகு முரசின் முழங்கி, இடித்து இடித்துப்
பெய்க, இனி; வாழியோ, பெரு வான்! - யாமே,
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு . . . . [05]

இவளின் மேவினம் ஆகி, குவளைக்
குறுந்தாள் நாள் மலர் நாறும்
நறுமென் கூந்தல் மெல் அணையேமே.
- பாண்டியன் பன்னாடுதந்தான்.

பொருளுரை:

யாம்! செய்வினை முற்றுவித்ததனால் நிறைவை உடைய உள்ளத்தோடு இத்தலைவியோடு விரும்பிப் பொருந்தினேமாகி சூடிய குவளையினது குறிய காம்பை உடைய அலர்ந்த செவ்வியை உடைய மலர் மணக்கின்ற நல்ல மெல்லிய கூந்தலாகிய மெல்லிய பாயலின் கண்ணே இருந்தேம். ஆதலின் பெரிய மேகமே இப்பொழுது தங்கிய இருள் கெடும்படி மின்னுதலைச் செய்து குளிர்ச்சி உண்டாம்படி வீழுகின்ற துளிகளுள் இனியவற்றைத் துளித்து முறைமையினால் குறுந்தடியால் அடிக்கப் பெறும் முரசைப் போல முழங்கி பன்முறை இடித்து மழையைப் பெய்து வாழ்வாயாக!

முடிபு:

யாம் மெல்லணையேம்; பெருவான், இனி மின்னிச் சிதறிஇடித்துப் பெய்து வாழி!

கருத்து:

நாம் இன்பம் பெற்றேம்; மழை நன்கு பெய்வதாக!