குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 206

குறிஞ்சி - தலைவன் கூற்று


குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

பாங்கன் தன்னை இடித்துரைத்தபோது, “அறியாமையால் நான்காம நோயுற்றேன். இனிச் செய்யுமாறு யாது? நீவிர் அங்ஙனம் செய்யற்க” என்று தலைவன் கூறியது.

அமிழ்தத்தன்ன அம் தீம் கிளவி
அன்ன இனியோள் குணனும், இன்ன
இன்னா அரும் படர் செய்யும்ஆயின்,
உடன் உறைவு அரிதே காமம்;
குறுகல் ஓம்புமின், அறிவுடையீரே! . . . . [05]
- ஐயூர் முடவனார்.

பொருளுரை:

அறிவையுடையவரே அமிழ்தத்தைப் போன்ற அழகிய இனிய சொற்களையுடைய மனத்தாலுணர்தல் மாத்திரையே யியன்ற அத்தகைய இனிமையையுடையோளது குணமும் இத்தகைய இன்னாதனவாகிய துன்பங்களை உண்டாக்குமாயின் காமமானது ஒருங்கு வாழ்தற்கு அரிது; ஆதலின் அதனை அணுகுதலைப் பரிகரிமின்.

முடிபு:

அறிவுடையீரே, இனியோள் குணனும் படர்செய்யுமாயின் காமம் உடனுறைவரிது; குறுகல் ஓம்புமின்.

கருத்து:

காமம் என்னால் தாங்கற்கரியது.