குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 294

நெய்தல் - தோழி கூற்று


நெய்தல் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

பகற்குறிக்கண் தலைவன் சிறைப்புறமாக நிற்ப, தோழி தலைவிக்குக் கூறுவாளாகி, “பலரோடு நாம் விளையாடும்போது தலைவன் வந்து அளவளாவிச் சென்றால் அலருண்டாகும்; அதனால் நாம் இன்பத்தையே பெறுவோம். எப்பொழுதும் அருகில் தலைவன் இருத்தலின் தாய் அறிந்தாள்; இனி இல்லிற்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாள்; இதற்குத் தலைவனே காரணம் ஆயினன்” என்று கூறியது.

கடல் உடன் ஆடியும், கானல் அல்கியும்,
தொடலை ஆயமொடு தழூஉ அணி அயர்ந்தும்,
நொதுமலர் போலக் கதுமென வந்து,
முயங்கினன் செலினே, அலர்ந்தன்று மன்னே;
துத்திப் பாந்தள் பைத்து அகல் அல்குல் . . . . [05]

திருந்துஇழைத் துயல்வுக் கோட்டு
அசைத்த பசுங் குழைத்
தழையினும், உழையின் போகான்;
தான் தந்தனன், யாய் காத்து ஓம்பல்லே.
- அஞ்சிலாந்தையார்.

பொருளுரை:

கடலிடத்தே ஒருங்கேநீர் விளையாட்டுப் புரிந்தும் கடற்கரைச் சோலையினிடத்தே தங்கியும் மாலையையுடைய மகளிர் கூட்டத்தோடு குரவை கோத்து ஆடியும் அயலாரைப் போல விரைவாக வந்து தலைவன் தழுவிச் செல்வானாயின் அலருண்டாயிற்று; இப்பொழுது அங்ஙனம் செய்யாமல் தேமல் படர்ந்த விரிந்து அகன்ற அல்குலினது திருத்தமுறச் செய்த அணிகலன்கள் அசைதலையுடைய பக்கத்தின்கண் கட்டிய பசியதளிராற் செய்த தழையைக் காட்டினும் மிக அணிமையிலிருந்து போகானாகி அக்காரணத்தால் தாய் நம்மை இற்செறித்துக் காவல்செய்தலை தானே உண்டாக்கினன்.

முடிபு:

ஆடியும் அல்கியும் அயர்ந்தும் முயங்கினன் செலின், அலர்ந்தன்று மன்; உழையிற் போகான், தான் ஓம்பலைத் தந்தனன்.

கருத்து:

தலைவனை யறிந்த தாய் நின்னை இற்செறிக்கக் கருதினாள்.