குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 245

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றாள் எனக் கவன்ற தோழியை நோக்கி, "தலைவனது கொடுமையைப் பிறர் அறியின் அது மிக இன்னாது; ஆதலின் யான் ஆற்றியிருப்பேன்" என்று தலைவி கூறியது.

கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என்
நலம் இழந்ததனினும், நனி இன்னாதே
வாள் போல் வாய கொழு மடல் தாழை
மாலை வேல் நாட்டு வேலி ஆகும்
மெல்லம் புலம்பன் கொடுமை . . . . [05]

பல்லோர் அறியப் பரந்து வெளிப்படினே.
- மாலைமாறனார்.

பொருளுரை:

தோழி! வாளரம் போன்ற விளிம்பை உடைய கொழுவிய மடலை உடைய தாழையானது வரிசையாக உள்ள வேல்களை நாட்டிய வேலியைப் போலப் பயன் தரும் மெல்லிய கடற்கரையை உடைய தலைவன் என் மாட்டுச் செய்த கொடுமை பலர் அறியும் வண்ணம் பரவி வெளிப்பட்டால் அங்ஙனம் வெளிப்படுதல் அழகிய கடற்கரைச் சோலையிலே விளையாடும் மகளிர் கூட்டத்தினர் பாராட்டிய எனது பெண்மை நலத்தை நான் இழந்ததைக் காட்டிலும் மிக இன்னாமையைத் தருவதாகும்.

முடிபு:

புலம்பன் கொடுமை வெளிப்படின் நலம் இழந்ததனினும் இன்னாது.

கருத்து:

என் துயரப் பிறர் அறியாதவாறு ஆற்றுவேன்.