குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 289

முல்லை - தலைவி கூற்று


முல்லை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் கூறிய பருவம் வந்தது கண்டு தலைவி வேறுபட்டாள் எனக் கவலையுற்ற தோழிக்கு, “நான் அவரை நினைந்து இரங்கினேன் அல்லேன்; என் பொருட்டுக் கவலை உடையார் போல் இவ்வூரினர் அவரைக் கொடியர் என்பதை அறிந்தே வருந்தினேன்” என்று தலைவி கூறியது.

வளர்பிறை போல வழிவழிப் பெருகி,
இறைவளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழை பிசைந்தனையேம் ஆகிச் சாஅய்,
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும்,
மழையும் - தோழி! - மான்றுபட்டன்றே; . . . . [05]

பட்ட மாரி படாஅக் கண்ணும்,
அவர் திறத்து இரங்கும் நம்மினும்,
நம் திறத்து இரங்கும், இவ் அழுங்கல் ஊரே.
- பெருங் கண்ணனார்.

பொருளுரை:

தோழி! பூருவ பக்கத்துவளர்கின்ற பிறையைப் போல மேலும்மேலும் பெருக்கத்தை அடைந்து தோட்சந்தில் அணிந்த வளையை நெகிழச் செய்த துன்பத்தைத் தரும் காம நோயினால் தளிரைக் கசக்கினாற் போன்ற நிலையை உடையேமாகி மெலிந்து அந் நோயைத் தீர்ப்பதற்குரிய தலைவர் பக்கத்தில் உள்ளார் அல்லாமையினால் நாம் துன்பப்படுவது அல்லாமலும் இம் மழையும் மயங்கிப் பெய்தது அங்ஙனம் பெய்த மழை பெய்வதற்கு முன்னரே இந்தக் கலக்கத்தை உடைய ஊரில் உள்ளார் அவர் பொருட்டு வருந்துகின்ற நம்மைக் காட்டிலும் மிக நம்மாட்டு இரங்குவர்.

முடிபு:

தோழி, அனையேமாகிச் சாஅய் உழப்பதன்றியும் மழையும் மான்றுபட்டன்று; படாஅக் கண்ணும் ஊர் இரங்கும்.

கருத்து:

பிறர் தலைவரைக் கொடியர் என்பது நினைந்து வேறுபட்டேன்.