குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 124

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவி தலைவனுடன் செல்ல விரும்பினாள். தன்னோடு வரின் அவள் இன்னல் எய்துவள் என்று தலைவன் கூறினான். அப்பொழுது அத்தலைவனிடம் தோழி கூறியது.

உமணர் சேர்ந்து கழிந்து மருங்கின் அகன்றலை
ஊர் பாழ்த்தன்ன ஓமையம் பெருங்காடு
இன்னா என்றீர் ஆயின்,
இனியவோ பெரும, தமியோர்க்கு மனையே?
- சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ.

பொருளுரை:

உப்பு வணிகர்கள் சேர்ந்து கழிந்த பக்கத்தையும் அகன்ற இடத்தையும் உடைய குடியிருந்த ஊர் பாழாகப் போனதைப் போன்ற தோற்றத்தையுடைய ஓமை மரங்கள் நிறைந்த பெரிய காடு துன்பம் தருவது (தலைவிக்கு) என்று நீ கூறுவாயின், துணைவரைப் பிரிந்து தனியே இருக்கும் மகளிர்க்கு இல்லம் இனிமையானதா?

குறிப்பு:

மனையே - ஏகாரம் அசை நிலை. பொ. வே. சோமசுந்தரனார் உரை - ‘காடு இன்னா என்றீர்’ என்றது ‘உடன்போவார்க்கு இனியாவாகவும் நீயிர் இன்னா என்கின்றீர்’ என்பதுபட நின்றது. ‘இனியவோ’ என்றது இன்னாவுடையனவாதல் ஒருதலை’ என்பதுபட நின்றது. இனியவோ (4) - உ. வே. சாமிநாதையர் உரை - இந்த வினா எதிர்மறைப் பொருளுடையது.

சொற்பொருள்:

உமணர் - உப்பு வணிகர்கள், சேர்ந்து - சேர்ந்து, கழிந்து மருங்கின் - கடந்து சென்ற பக்கத்தையும், அகன்றலை - அகன்ற இடம், ஊர் பாழ்த்தன்ன - குடியிருந்த ஊர் பாழாகப் போனதைப் போன்ற தோற்றத்தையுடைய, ஓமையம் பெருங்காடு - ஓமை மரங்கள் நிறைந்த பெரிய காடு, இன்னா என்றீர் ஆயின் - துன்பம் தருவது என்று நீ கூறுவாயின், இனியவோ - இனிமையானதா (இனிமையானது இல்லை), பெரும - தலைவா, தமியோர்க்கு - தனிமையில் இருப்பவர்களுக்கு, மனையே - இல்லம்