குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 155

முல்லை - தலைவி கூற்று


முல்லை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் கூறிச் சென்ற பருவம் வந்தமை யறிந்த தலைவி, "இன்னும் அவர் வந்திலர்" என்று கூறி வருந்தியது.

முதைப் புனம் கொன்ற ஆர்கலி உழவர்
விதைக் குறு வட்டி போதொடு பொதுளப்
பொழுதோ தான் வந்தன்றே; 'மெழுகு ஆன்று
ஊது உலைப் பெய்த பகுவாய்த் தெண் மணி
மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப, சுரன் இழிபு . . . . [05]

மாலை நனி விருந்து அயர்மார்
தேர் வரும்' என்னும் உரை வாராதே.
- உரோடகத்துக் காரத்தனார்.

பொருளுரை:

பழங்கொல்லையை உழுத மிக்க ஆரவாரத்தையுடைய உழவர்களுடைய காலையிலே விதைக்கும் பொருட்டு விதையை எடுத்துச் சென்ற சிறிய வட்டிகள் விதைத்து விட்டு வீட்டிற்கு மீளும் பொழுது மலர்கள் நிறையும்படி மாலைப் பொழுது வந்தது அரக்காற் செய்த கருவில் அமைத்து ஊதுகின்ற கொல்லனுலையின்கண் பெய்து இயற்றிய பிளவுபட்ட வாயையுடைய தெளிந்த ஓசையையுடைய மணிகள் மரங்கள் நெருங்கி வளர்ந்த குறுங்காட்டிடத்து ஒலிக்கும்படி அருவழியைக் கடந்து மாலைக் காலத்தில் மிக விருந்து நுகரும் பொருட்டு வரும் தலைவருடைய தேர் வருகின்ற தென்று கூறும் உரை வந்திலது.

முடிபு:

பொழுதோ வந்தன்று; விருந்தயர்மார் தேர் வருமென்னும் உரை வாராது.

கருத்து:

மாலைக் காலம் வரவும் தலைவர் வந்திலர்.