குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 016

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த காலத்தில், கவலையுற்ற தலைவியைத் தோழி ஆற்றுப்படுத்தியது.

உள்ளார் கொல்லோ தோழி, கள்வர் தம்
பொன் புனை பகழி செப்பம் கொண்மார்
உகிர் நுதி புரட்டும் ஓசை போலச்,
செங்கால் பல்லி தன் துணை பயிரும்,
அம் கால் கள்ளியங்காடு இறந்தோரே? . . . . [05]
- சேர மன்னன் பாலை பாடிய பெருங்கடுங்கோ.

பொருளுரை:

உன்னை அவர் நினைப்பாரா தோழி, வழிப்பறி செய்யும் கள்வர்கள் தங்கள் கூர்மையான நக முனையினால் இரும்பினால் செய்த தங்கள் அம்புகளை செம்மைப்படுத்தும் பொருட்டு உரசும் ஓசையைப் போல், சிவந்த கால்களையுடைய பல்லி தன் துணையை அழைக்கும் ஓசைத் தோன்றும் அழகிய அடியையுடைய கள்ளிச் செடிகளைக் கொண்ட காட்டு வழிச் சென்ற நம் தலைவர்? உறுதியாக நினைப்பார்.

குறிப்பு:

பொன் (2) - உ. வே. சாமிநாதையர் உரை - இரும்பு. உகிர் நுதி புரட்டும் ஓசை (3) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - உகிரால் வருடும் ஓசை. உ. வே. சாமிநாதையர் உரை - தலைவர் விரைவில் வந்து விடுவார், பொ. வே. சோமசுந்தரனார் உரை - பல்லி துணை பயிரும் ஒலி கேட்புழி அவர் தம் துணையாகிய உன்னை நினையாதிரார். நினைப்பார் ஆகலின் விரைந்து வருவார் என ஆற்றியவாறு. இறைச்சி - தமிழண்ணல் உரை - சிற்றுயிர்களாகிய கார்ப்பொருளின் காதலைக்கூறி, மானிட உரிப்பொருளுக்குத் துணையுமாக வரும் இதுவே ‘இறைச்சி’ எனப்படும். ஓ, ஏ - அசை நிலைகள்.

சொற்பொருள்:

உள்ளார் கொல்லோ தோழி - நினைப்பாரா தோழி, கள்வர் - வழிப்பறி செய்யும் கள்வர்கள், தம் - தம்முடைய, பொன் புனை பகழி - இரும்பினால் செய்த அம்பு, செப்பங் கொண்மார் - செம்மைப்படுத்தும் பொருட்டு, உகிர் நுதி - கூர்மையான நக நுனி, புரட்டும் - சொரியும், உரசும், ஓசை போல - ஓசையைப் போல, செங்கால் பல்லி - சிவந்த கால்களையுடைய பல்லி, தன் துணை பயிரும் - தன் துணையை அழைக்கும், அம் கால் - அழகிய அடி, கள்ளியங்காடு - கள்ளிச் செடி நிறைந்த காடு, இறந்தோரே - சென்றவர்