குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 361

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

வரைவுக்குரிய முயற்சிகள் நிகழாநிற்ப, “இதுகாறும் நீ தலைவன் பிரிவை நன்கு ஆற்றினை” என்று கூறிப் பாராட்டிய தோழியை நோக்கி, “அவர் மலையிலிருந்து வந்த காந்தளை வளர்த்து ஆற்றினேன்” என்று தலைவி கூறியது.

அம்ம வாழி, தோழி! - அன்னைக்கு
உயர்நிலை உலகமும் சிறிதால் - அவர் மலை
மாலைப் பெய்த மணம் கமழ் உந்தியொடு
காலை வந்த முழுமுதற் காந்தள்
மெல் இழை குழைய முயங்கலும், . . . . [05]

இல் உய்த்து நடுதலும், கடியாதோளே.
- கபிலர்.

பொருளுரை:

தோழி! ஒன்று கூறுவன் கேட்பாயாக; தலைவருடைய மலையிலே மாலைக் காலத்திலே பெய்த மழையினால் உண்டாகிய நறுமணம் கமழும் ஆற்றோடு காலையிலே இங்கே வந்த காந்தளினது மெல்லிய இலையானது குழையும்படி தழுவுதலையும் வீட்டிற்கொணர்ந்து அதன் கிழங்கை நான் நடுதலையும் விலக்காதவளாகிய தாய்க்கு உயர்ந்த நிலையாகிய தேவருலகும் கைம்மாறாகக் கருதுமிடத்துச் சிறிதாகும்.

முடிபு:

தோழி, உந்தியொடு வந்த காந்தண் முழுமுதலை முயங்கலும் நடுதலும் கடியாதோளாகிய அன்னைக்கு உயர்நிலை யுலகமும் சிறிது.

கருத்து:

தலைவன் மலையிலிருந்து வந்த காந்தளைக் கொண்டு ஆற்றியிருந்தேன்.