குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 247

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் விரைவில் வரைந்து கொள்வான் என்று தலைவியிடம் தோழி கூறியது.

எழில் மிக உடையது; ஈங்கு அணிப்படூஉம்;
திறவோர் செய்வினை அறவது ஆகும்;
கிளையுடை மாந்தர்க்குப் புணையுமார் இவ், என
ஆங்கு அறிந்திசினே - தோழி! - வேங்கை
வீயா மென் சினை வீ உக, யானை . . . . [05]

ஆர் துயில் இயம்பும் நாடன்
மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே.
- சேந்தம் பூதனார்.

பொருளுரை:

தோழி! வேங்கை மரத்தினது கெடாத மெல்லிய கிளையில் இருந்து மலர்கள் உதிர அங்ஙனம் உதிரும் இடத்திலே யானையானது பெறுதற்கரிய துயில் செய்வதனால் உயிர்ப்பின் ஒலி உண்டாகும் நாட்டை உடைய தலைவனது மார்பை உரியதாகப் பெற்ற குற்றமற்ற நட்பானது மிக அழகுடையது; இவ்விடத்தில் அணிமைக் காலத்தே உண்டாகும்; திறமை உள்ளோர் செய்யும் காரியம் அறத்தொடு பொருந்தியதாகும்; சுற்றத்தை உடைய மக்களுக்கு இவை பற்றுக்கோடும் ஆகும் என்று அங்ஙனம் அறிந்தேன்.

குறிப்பு:

முடிபு: தோழி, நாடன் நட்பு எழில் உடையது; அணிப்படூஉம்; வினை அறவதாகும்; இவ் புணையும் ஆம்; ஆங்கு அறிந்திசின்.

கருத்து:

தலைவன் நின்னை விரைவில் வரைந்து கொள்வான்.