குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 329

பாலை - தலைவி கூற்று


பாலை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பிரிந்த காலத்து வருந்திய தலைவியைத் தோழிவற்புறுத்தினாளாக, "யான் ஆற்றுவேன்; என்கண்கள் துயிலாவாகி அழுதன" என்று தலைவி கூறியது.

கான இருப்பை வேனில் வெண் பூ
வளி பொரு நெடுஞ் சினை உஞற்றலின், ஆர் கழல்பு,
களிறு வழங்கு சிறு நெறி புதையத் தாஅம்
பிறங்குமலை அருஞ் சுரம் இறந்தவர்ப் படர்ந்து,
பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகி, . . . . [05]

தெள் நீர் நிகர் மலர் புரையும்
நல் மலர் மழைக்கணிற்கு எளியவால், பனியே.
- ஓதலாந்தையார்.

பொருளுரை:

காட்டில் உள்ள இருப்பை மரத்தினது, வேனில் காலத்தில் மலரும் வெள்ளை மலர்களை காற்றினால் அலைக்கப்பட்ட நெடிய கிளைகள் உதிர்ப்பதனால், அவை காம்பிலிருந்து கழன்று, களிற்று யானைகள் செல்லும் சிறிய வழி மறையும்படி பரவுகின்ற, விளங்குகின்ற மலைகளையுடைய அரிய பாலை நிலத்தைக் கடந்து சென்ற தலைவரை நினைந்து, மிக்க இருளையுடைய நடு இரவில் துயில்தல் அரியதாகி, தெளிந்த நீரில் உள்ள ஒளியுடைய மலரை ஒத்திருக்கும் நல்ல மலர்ந்த குளிர்ச்சியுடைய என் கண்களில் நீர்த்துளிகள் எளிதில் உண்டாயின.

முடிபு:

சுரம் இறந்தவர்ப் படர்ந்து துயில் அரிதாகிக் கண்ணிற்குப்பனி எளிது.

கருத்து:

யான் ஆற்றியிருப்பவும் என் கண்கள் துயிலுதலொழிந்து அழுதன.

குறிப்பு:

தாஅம் - அளபெடை, எளியவால் - ஆல் அசைநிலை, பனியே - ஏகாரம் அசை நிலை, கணிற்கு - கண்ணிற்கு என்பதன் தொகுத்தல் விகாரம்.

சொற்பொருள்:

கானம் இருப்பை - காட்டில் உள்ள இருப்பை மரம், வேனல் வெண்பூ - வேனில் காலத்தில் மலரும் வெள்ளை மலர்கள், வளி பொரு - காற்றினால் அலைக்கப்பட்டது, நெடுஞ்சினை உகுத்தலின் - நெடிய கிளைகள் உதிர்ப்பதனால், ஆர் கழல்பு - காம்பிலிருந்து நீங்கி (கழன்று), களிறு வழங்கு சிறுநெறி புதைய - களிற்று யானைகள் செல்லும் சிறிய வழி மறையும்படி, தாஅம் - பரவுகின்ற, பிறங்கு மலை அருஞ்சுரம் - விளங்குகின்ற மலைகளையுடைய அரிய பாலை நிலம், இறந்தவர்ப் படர்ந்து - கடந்து சென்ற தலைவரை நினைந்து, பயில் இருள் நடுநாள் துயில் அரிதாகி - மிக்க இருளையுடைய நடு இரவில் துயில்தல் அரியதாகி, தெள் நீர் நிகர் மலர் புரையும் - தெளிந்த நீரில் உள்ள ஒளியுடைய மலரை ஒத்திருக்கும், நன் மலர் மழைக் கணிற்கு - நல்ல மலர்ந்த குளிர்ச்சியுடைய கண்ணிற்கு, எளியவால் பனியே - நீர்த்துளிகள் எளிதில் உண்டாயின