குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 260

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவனது பிரிவை ஆற்றாதிருந்த தலைவியை நோக்கி, "நன்னிமித்தங்கள் உண்டாகின்றன; ஆதலின் தலைவர் வந்து விடுவர்; நீ ஆற்றுக" என்று தோழி கூறியது.

குருகும் இரு விசும்பு இவரும்; புதலும்
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே;
சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்;
வருவர்கொல் வாழி - தோழி! - பொருவார்
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை . . . . [05]

வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து,
கன்று இல் ஓர் ஆ விலங்கிய
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே.
- கல்லாடனார்.

பொருளுரை:

தோழி! நாரைகளும் கரிய வானத்தின்கண் உயரப் பறக்கும்; புதலிலுள்ள போதுகளும் கோடுகளை உடைய வண்டுகள் ஊதுவதனால் மலர்ந்தன; சுழித்த சங்காற் செய்த வளையினால் விளங்கிய தோள்களும் நெகிழ்ச்சி நீங்கி வளையோடு செறியும்; ஆதலின் பகைவரது பூமியைக் கொண்டு நுகரும் தலைமை பொருந்திய யானையையும் வளவிய தேரையுமுடைய தொண்டை மான்களுக்குரிய சுர புன்னைகள் நெருங்கிய மலைப் பக்கத்தில் கன்றில்லாத ஒற்றைப் பசுவை நிழலினால் தம்பால் வரச் செய்து தடுத்த புல்லிய அடியை உடைய ஓமை மரங்களை உடைய பாலை நிலங்களை கடந்து சென்ற தலைவர் வருவர்.

முடிபு:

தோழி, குருகும் இவரும்; புதலும் நெகிழ்ந்தன; தோளுஞ்செற்றும்; சுரன் இறந்தோர் வருவர்.

கருத்து:

நன்னிமித்தங்கள் உண்டாதலின் தலைவர் வருவர்.