குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 017

குறிஞ்சி - தலைவன் கூற்று


குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

தோழியால் குறை மறுக்கப்பட்ட தலைவன், அத்தோழியிடம், தான் மடலேற எண்ணியிருத்தலை உரைத்தது.உலகின்மேல் வைத்து தன் குறையைக் கூறினான்.

மாவென மடலும் ஊர்ப, பூவெனக்
குவி முகிழ் எருக்கங்கண்ணியும் சூடுப,
மறுகின் ஆர்க்கவும் படுப,
பிறிதும் ஆகுப, காமம் காழ்க் கொளினே.
- பேரெயில் முறுவலார்.

பொருளுரை:

காம நோய் மிகவும் முதிர்ந்தால், பனைமடலையும் குதிரையெனக் கொண்டு ஆண்கள் அதனை செலுத்துவார்கள், அடையாள மாலையாக குவிந்த அரும்பையுடைய எருக்கம்பூவின் கண்ணியையும் தங்கள் தலையில் சூடுவார்கள், தெருவில் பிறர் தம்மைக் கண்டு ஆரவாரிக்கவும் படுவார்கள். தங்கள் கருத்து முற்றவில்லை என்றால் சாவுதற்குரிய செயலையையும் துணிந்து செய்வார்கள்.

குறிப்பு:

பூவென (1) - உ. வே. சாமிநாதையர் உரை - அடையாள மாலையைப் போல், பொ. வே. சோமசுந்தரனார் உரை - சூடும் மரபில்லாதாயினும் சூடும் மரபுடைய பூவாகக் கொண்டு. கண்ணியும் சூடுப (2) - உ. வே. சாமிநாதையர் உரை - கண்ணி தலையில் புனைவதாதலின் சூடுப என்றான். மடலும் - உம்மை இழிவு சிறப்பு, கொளினே - ஏகாரம் அசை நிலை. மடல் ஏறுதல் - சங்க இலக்கியத்தில் மொத்தம் 16 பாடல்களில் மடல் ஏறுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன - குறுந்தொகை 14, 17, 32, 173, 182, நற்றிணை 146, 152, 220, 342, 377, கலித்தொகை 58, 61, 138, 139, 140, 141. கலித்தொகை 138, 139, 140, 141 பாடல்களில் மட்டுமே தலைவன் மடல் குதிரையின் மீது செல்கின்றான். கலித்தொகை 138, 141 ஆகிய பாடல்களில் மடல் ஏறியதால் தலைவியை அடைந்ததாக அறிவிக்கின்றான். காழ்க் கொள்ளுதல் - உ. வே. சாமிநாதையர் உரை - முதிர்வுற்றல், காமமாகிய கனி பரலை உடையதானால் என்று கொண்டு, பரல் என்பதற்கு பரல் போன்ற தடையென்று உருவக ஆற்றால் பொருள் செய்து காமம் நிறைவேறாமல் தடைப்படுமாயின் என்று உரைகோடலும் ஒன்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை - நனி முதிர்ந்தல், தமிழண்ணல் உரை - வைரம் பாய்ந்து முற்றுதல், இரா. இராகவையங்கார் உரை- முற்றிய பரலாகிய விதையைத் தம் முட்கொள்ளின் என்றவாறு.

சொற்பொருள்:

மாவென மடலும் ஊர்ப - பனைமடலையும் குதிரையெனக் கொண்டு ஆண்கள் அதனை ஊர்வர், பூவெனக் குவி முகிழ் எருக்கங்கண்ணியும் சூடுப - அடையாள மாலையாக குவிந்த அரும்பையுடைய எருக்கம்பூ கண்ணியையும் தங்கள் தலையில் சூடுவார்கள், மறுகின் ஆர்க்கவும் படுப - தெருவில் பிறர் தம்மைக் கண்டு ஆரவாரிக்கவும் படுவார்கள், பிறிதும் ஆகுப - தங்கள் கருத்து முற்றவில்லை என்றால் சாவுதற்குரிய செயலையையும் துணிந்து செய்வார்கள், காமம் காழ்க் கொளினே - காம நோய் மிகவும் முதிர்ந்தால்