குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 159

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் கேட்கும் அணிமையிலே நின்றானாக, “தலைவியின் துயரத்தை உணர்ந்து இரங்காதாரை யுடையதாயிற்று இவ்வூர்” என்று கூறும் வாயிலாகத் தலைவியை இற்செறிக்கக் கருதி யிருப்பதைத் தோழி அவனுக்குப் புலப்படுத்தியது.

'தழை அணி அல்குல் தாங்கல் செல்லா
நுழை சிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக,
அம்மெல் ஆகம் நிறைய வீங்கிக்
கொம்மை வரி முலை செப்புடன் எதிரின;
யாங்கு ஆகுவள்கொல் பூங்குழை?' என்னும் . . . . [05]

அவல நெஞ்சமொடு உசாவாக்
கவலை மாக்கட்டு-இப் பேதை ஊரே.
- வடம வண்ணக்கண் பேரிசாத்தனார்.

பொருளுரை:

இந்தப் பேதைமையையுடைய ஊர் தழையை அணிந்த அல்குலை பொறுத்தலாற்றாத நுணுகிய சிறிய இடைக்கு துன்பம் உண்டாகும்படி அழகிய மெல்லிய மார்பகம் நிறையப் பருத்து பெருமையையும் தேமலையும் உடைய நகில்கள் செப்போடு மாறுபட்டன; பூத் தொழிலையுடைய குண்டலத்தை யணிந்த தலைவி என்ன துன்பத்தையுடையள் ஆவளோ என்று எண்ணும் கவலையையுடைய நெஞ்சத்தோடு ஏனென்று கேளாத கவலையையுடைய மாக்களை உடையது.

முடிபு:

இப்பேதையூர் ‘பூங்குழை யாங்காகுவள்’ என உசாவாக் கவலைமாக்கட்டு.

கருத்து:

என்தாய் முதலியோர் என் நிலையை உணர்ந்திலர்.