குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 183

முல்லை - தலைவி கூற்று


முல்லை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வரவும் அவன் வாராமையால் தலைவி ஆற்றாளென்று எண்ணி வருந்திய தோழியை நோக்கி, “கார் காலத்துக்குரிய அடையாளங்களை அவர் கண்டு என்னை நினைந்து வருவர்” என்பதுபடத் தலைவி கூறியது.

சென்ற நாட்ட கொன்றைஅம் பசு வீ
நம் போல் பசக்கும் காலை, தம் போல்
சிறு தலைப் பிணையின் தீர்ந்த நெறி கோட்டு
இரலை மானையும் காண்பர்கொல், நமரே?
புல்லென் காயாப் பூக் கெழு பெருஞ் சினை . . . . [05]

மென் மயில் எருத்தின் தோன்றும்
புன் புல வைப்பிற் கானத்தானே.
- அவ்வையார்.

பொருளுரை:

தோழி! மழை பெய்வதற்கு முன் பொலிவழிந்திருந்த காயாவினது மலர்கள் பொருந்திய பெரிய கிளை மழை பெய்தபின் மெல்லிய மயிலினது கழுத்தைப் போலத் தோற்றும் காட்டிடத்தையுடைய புல்லிய நிலத்தின்கண் எம்மைப் பிரிந்து சென்று தங்கிய நாட்டிடத்து உள்ளனவாகிய கொன்றையின் அழகிய செவ்வி மலர்கள் நம்மைப் போலப் பசலை நிறத்தையடையும் கார்ப் பருவத்தில் சிறிய தலையையுடைய பெண் மானிடத்தினின்றும் நீங்கிய நெறிந்த கொம்பையுடைய ஆண்மானையும் நம் தலைவர் காண்பரோ; காணார்.

முடிபு:

புன்புலத்தான் கொன்றையம் பசுவீ பசக்குங் காலைப் பிணையிற்றீர்ந்த இரலை மானையும் நமர் காண்பர்கொல்?

கருத்து:

கார்காலம் வந்ததை அறிந்து தலைவர் விரைவில் வந்து விடுவர்.