குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 350

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பிரிந்தபின் வேறுபட்ட தலைவியை நோக்கி, "நாம் அவர் செல்லும்பொழுது போகற்கவெனத் தடுத்தேமேல் அவர் செல்லார். அப்பொழுது உடம்பட்டு இப்பொழுது வருந்துதல் தக்கதன்று" என்றுதோழி கூறியது.

அம்ம வாழி - தோழி! - முன் நின்று,
'பனிக் கடுங்குரையம்; செல்லாதீம்' எனச்
சொல்லினம்ஆயின், செல்வர்கொல்லோ - ஆற்று
அயல் இருந்த இருங் கோட்டு அம் சிறை
நெடுங் காற் கணந்துள் ஆள் அறிவுறீஇ, . . . . [05]

ஆறு செல் வம்பலர் படை தலைபெயர்க்கும்
மலையுடைக் கானம் நீந்தி,
நிலையாப் பொருட் பிணிப் பிரிந்திசினோரே?
- ஆலத்தூர் கிழார்.

பொருளுரை:

தோழி! ஒன்று கூறுவன் கேட்பாயாக வழியின் அயலிலே இருந்த பெரிய தொகுதியாகிய அழகிய சிறகுகளையும் நெடிய காலையும் உடைய கணந்துட் பறவைகள் தமக்குஊறு விளைக்கும் வேட்டுவ மக்களுண்மையை அறிவுறுத்தி வழிப் போகும் பிரயாணிகளது சேனைத்திரளை இடத்தினின்று நீங்கச் செய்யும் மலையையுடைய காட்டைக் கடந்து நிலையில்லாத பொருள் வேட்கையினால் நம்மைப் பிரிந்து சென்றோர் அவர் பிரியுங்காலத்து அவர்முன்னே நின்று யாம் பனியினது கடுமையையுடையேம் ஆதலின் போதலை ஒழிமின் என்று கூறினோமாயின் போவாரோ?

முடிபு:

தோழி, முன்னின்று செல்லாதீமெனச் சொல்லினமாயின் பிரிந்திசினோர் செல்வர்கொல்?

கருத்து:

நாம் தலைவரை முன்பே தடுத்திருப்பின் செல்லார்.