குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 164

மருதம் - காதற்பரத்தை கூற்று


மருதம் - காதற்பரத்தை கூற்று

பாடல் பின்னணி:

தலைவி தன்னைப் புறங்கூறினாளெனக் கேட்ட காதற்பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழியை நோக்கிக் கூறுவாளாய், “தலைவி குறை கூறுதற்குரிய குற்றம் உடையேமெனின் எம்மைக் கடல் வருத்துக” என்று சொல்லியது.

கணைக் கோட்டு வாளைக் கமஞ் சூல் மட நாகு
துணர்த் தேக்கொக்கின் தீம் பழம் கதூஉம்
தொன்று முதிர் வேளிர் குன்றூர்க் குணாது
தண்பெரும் பெளவம் அணங்குக - தோழி!
மனையோள் மடமையின் புலக்கம் . . . . [05]

அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே!
- மாங்குடி மருதனார்.

பொருளுரை:

தோழி! தலைவி தன் அறியாமையாற் புலப்பதற்குக் காரணமாகிய அத் தன்மையேமாக தலைவன் திறத்து நாம் ஆயினோமாயின் திரண்ட கொம்பையுடைய வாளை மீனினது நிறைந்த கருப்பத்தையுடைய மடப்ப மிக்க பெண்ணானது கொத்தையுடைய தேமாவினது உதிர்ந்த இனிய பழத்தை கவ்வுதற்கிடமாகிய மிகப் பழைய வேளிருக்குரிய குன்றூருக்குக் கிழக்கின் கண்ணுள்ளதாகிய தண்ணிய பெரிய கடல் எம்மை வருத்துவதாக.

முடிபு:

தோழி, மனையோள் புலக்கும் அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனின், பவ்வம் அணங்குக.

கருத்து:

தலைவி அறியாமையால் எம்மைக் குறைகூறுகின்றாள்.