குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 223

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

வரைபொருள் பொருட்டு தலைவன் பிரிந்த காலத்தில் ‘நீ ஆற்றியிரு’ என வற்புறுத்திய தோழியிடம் தலைவி கூறியது.

பேரூர் கொண்ட ஆர்கலி விழவில்
செல்வாம் செல்வாம் என்றி, அன்று இவண்
நல்லோர் நல்ல பலவால் தில்ல,
தழலும் தட்டையும் முறியும் தந்து, இவை
ஒத்தன நினக்கெனப் பொய்த்தன கூறி . . . . [05]

அன்னை ஓம்பிய ஆய் நலம்
என்னை கொண்டான், யாம் இன்னமால் இனியே.
- மதுரைக் கடையத்தார் மகனார் வெண்ணாகனார்.

பொருளுரை:

பெரிய ஊரில் உள்ளவர்கள் கொண்டாடும் ஆரவாரமுடைய விழாவிற்குப் போகலாம் போகலாம் என்று நீ கூறினாய். அன்று நாம் செல்லும் பொழுது இங்குள்ள நல்லவர்கள் பல நல்ல சொற்களைக் கூறினார்கள் (நிமித்தங்கள் பலவற்றைக் கூறினார்கள்). கிளி விரட்டும் கருவிகளான தழலையும் தட்டையும் தழை ஆடையையும் என்னிடம் தந்து இவை உனக்குப் பொருத்தமானவை என்று பொய்யைக் கூறி, என் தாய் பாதுகாத்த என்னுடைய அழகிய பெண்மை நலத்தை என்னுடைய தலைவன் கவர்ந்து கொண்டான். நான் இப்பொழுது இவ்வாறு ஆகி விட்டேன்.

குறிப்பு:

பலவால் - ஆல் அசை நிலை, இன்னமால் - ஆல் அசை நிலை. இனியே - ஏகாரம் அசை நிலை. தில்ல - தில் காலத்தின்கண் வந்த இடைச் சொல், ஈறு திரிந்தது வந்தது. தழல் (4) - உ. வே. சாமிநாதையர் உரை - கையால் சுற்றிய காலத்துத் தன்னிடத்துப் பிறக்கும் ஓசையாற் கிளி முதலியவற்றை ஓட்டும் கருவி. குறிஞ்சிப்பாட்டு 43 - தழலும் தட்டையும் குளிறும் பிறவும். தட்டை (4) - பொ. வே. சோமசுந்தரனார் உரை குறிஞ்சிப்பாட்டில் - மூங்கிலை குறுக்கே நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசை உண்டாகும்படி ஒன்றிலே தட்டும் கருவி. கலி - கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

சொற்பொருள்:

பேரூர் கொண்ட - பெரிய ஊரினர் மேற்கொண்ட, ஆர்கலி விழவில் - ஆரவாரமுடைய விழாவிற்கு, செல்வாம் செல்வாம் என்றி - போகலாம் போகலாம் என்று நீ கூறினாய் (என்றி - முன்னிலை ஒருமை), அன்று - அன்று, இவண் நல்லோர் - இங்குள்ள நல்லவர்கள், நல்ல பலவால் - நல்ல பலவாகிய சொற்கள் இருந்தன, தில்ல - தில் காலத்தின்கண் வந்த இடைச் சொல், ஈறு திரிந்தது வந்தது, தழலும் தட்டையும் - கிளி விரட்டும் கருவிகளான தழலையும் தட்டையும், முறியும் தந்து - தழை ஆடையையும் தந்து, இவை ஒத்தன நினக்கு என - இவை உனக்கு பொருத்தமானவை என்று, பொய்த்தன கூறி - பொய்யைக் கூறி, அன்னை ஓம்பிய ஆய் நலம் - தாய் பாதுகாத்த என்னுடைய அழகிய பெண்மை நலத்தை, என் ஐ கொண்டான் - என்னுடைய தலைவன் எடுத்துக் கொண்டான், யாம் இன்னமால் - யாம் இப்பொழுது இவ்வாறு ஆகினோம் (இன்னம் + ஆல், ஆல் - அசை நிலை), இனியே - இப்பொழுது