குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 292

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் இரவுக்குறிக்கண் வந்து சிறைப்புறத்தானாக, அதனை அறிந்த தோழி தலைவிக்குக் கூறுவாளாய், “நம் தாய், ஒரு நாள் தலைவன் வந்ததை அறிந்தாள்; அறிந்த அன்று முதல் முன்னையினும் மிகப் பாதுகாத்து வருகின்றாள்” என்று கூறி விரைவில் வரைந்து கோடலே நன்று என்பதைப் புலப்படுத்தியது.

மண்ணிய சென்ற ஒள் நுதல் அரிவை
புனல் தரு பசுங் காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று - ஒன்பது களிற்றொடு, அவள் நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும், கொள்ளான்,
பெண் கொலை புரிந்த நன்னன் போல, . . . . [05]

வரையா நிரையத்துச் செலீஇயரோ, அன்னை!
ஒரு நாள், நகை முக விருந்தினன் வந்தென,
பகை முக ஊரின், துஞ்சலோ இலளே.
- பரணர்.

பொருளுரை:

தாய் ஒரு நாளில் நகுதலை உடையமுகத்தைக் கொண்ட விருந்தினனாகித் தலைவன் வந்தானாக பகைவர் மாறுபடும் போர்க் களத்தின்கண் உள்ள ஊரினரைப்போல பலநாளும்துயில் செய்தல் இலள்; நீராடும் பொருட்டுச் சென்ற ஒள்ளிய நெற்றியை உடையபெண் அந்நீர்கொணர்ந்த பசுங்காயைத் தின்றதாகிய குற்றத்திற்காக எண்பத்தொரு ஆண்யானைகளோடு அவளது நிறையை உடைய பொன்னால்செய்த பாவையைக் கொடுப்பவும் கொள்ளானாகி அப்பெண்ணைக் கொலைசெய்த நன்னனைப் போல நீக்குதல் இல்லாத நரகத்தின்கண் சென்று துன்புறுவாளாக.

முடிபு:

அன்னை, ஒரு நாள் விருந்தினன் வந்தெனத் துஞ்சல்இலள்; நிரையத்துச் செலீஇயர்.

கருத்து:

அன்னையின் காப்பு இப்பொழுது மிக்கது.