குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 052
குறிஞ்சி - தோழி கூற்று
குறிஞ்சி - தோழி கூற்று
பாடல் பின்னணி:
தலைவன் வரைந்து கொள்ளுதற்குரிய முயற்சிகளைச் செய்வதையும் அதனைத் தமர் ஏற்றுக் கொண்டதையும் அறிந்து மகிழ்ந்த தலைவியை நோக்கி, “நீ வருந்துவதை யறிந்த யான் உண்மையைத் தாயர்க்கு அறிவித்தேன்; அதனால் இஃது உண்டாயிற்று” என்று தோழி உணர்த்தியது.
ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பிற்
சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே,
நரந்த நாறும் குவை இருங்கூந்தல்
நிரந்து இலங்கு வெண்பல் மடந்தை,
பரிந்தனென் அல்லனோ, இறை இறை யானே? . . . . [05]
சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே,
நரந்த நாறும் குவை இருங்கூந்தல்
நிரந்து இலங்கு வெண்பல் மடந்தை,
பரிந்தனென் அல்லனோ, இறை இறை யானே? . . . . [05]
- பனம்பாரனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்
சூர்நசைந் தனயையாய் நடுங்கல் கண்டே
நரந்த நாறுங் குவையிருங் கூந்தல்
நிரந்திலங்கு வெண்பன் மடந்தை
பரிந்தனெ னல்லனோ விறையிறை யானே . . . . [05]
சூர்நசைந் தனயையாய் நடுங்கல் கண்டே
நரந்த நாறுங் குவையிருங் கூந்தல்
நிரந்திலங்கு வெண்பன் மடந்தை
பரிந்தனெ னல்லனோ விறையிறை யானே . . . . [05]
பொருளுரை:
நரந்தப்பூவின் மணம் கமழ்கின்ற தொகுதியாகிய கரிய கூந்தலையும் வரிசையுற்று விளங்கும் வெள்ளிய பல்லையுமுடைய மடந்தையே தன்பால் பொருந்திய யானைகள் மிதித்தமையால் உண்டாகிய பள்ளத்தில் தங்கிய நீர் விளங்கும் மலைப் பக்கத்திலுள்ள தெய்வத்தால் விரும்பப் பெற்றாளைப் போன்றவளாகி நீ நம் கற்புக்கு ஏதம் வருமோவென்று அஞ்சி நடுங்குதலையறிந்து நின் வருத்தத்தைப் பொறாத யான் சிறிது சிறிதாக அப்பொழுதப் பொழுது இரங்கி வருந்தினேனல்லனோ?
முடிபு:
மடந்தையே, நீ நடுங்கல் கண்டு யான் பரிந்தனென் அல்லனோ?
கருத்து:
நின் துயர் கண்டு ஆற்றாமல் யான் அறத்தொடு நின்றேன்.






