குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 125

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வரைந்து கொள்ளாமல் நெடுநாள் ஒழுகினானாக வருந்திய தலைவி, அவன் கேட்கும் அண்மையில் இருப்பத்தோழியை நோக்கி, தலைவன் என் நலம் கொண்டான்; அந்நலம் என்னைப் பிரிந்தது. நான் இன்னும் உயிரோடு வாழ்ந்திருக்கின்றேன்” என்று கூறித் தலைவன் வரையாவிடின் உயிர் நீங்குமென்ற குறிப்பை உணர்த்தியது.

இலங்கு வளை நெகிழச் சாஅய், யானே,
உளெனே வாழி! - தோழி! - சாரல்
தழை அணி அல்குல் மகளிருள்ளும்
விழவு மேம்பட்ட என் நலனே, பழ விறல்
பறை வலம் தப்பிய பைதல் நாரை . . . . [05]

திரை தோய் வாங்கு சினை இருக்கும்
தண்ணம் துறைவனொடு, கண்மாறின்றே.
- அம்மூவனார்.

பொருளுரை:

தோழி! மலைச்சாரலில் விளைந்த தழையினாலாய உடையை அணியும் அல்குலையுடைய மகளிர் யாவரினும் விழாவைப் போலச் சிறப்பெய்திய எனது பெண்மை நலம் பழைய விறலையுடைய சிறகின் வன்மை தவறியதனால் உண்டாகிய துன்பத்தையுடைய நாரை அலைகள் தோயப் பெற்ற வளைந்த மரக்கிளையில் தங்கியிருக்கும் குளிர்ந்த கடற்றுறையையுடைய தலைவனோடு என்னை விட்டுப் பிரிந்து சென்று இடம் பெயர்ந்தது; அங்ஙனமாகவும் யான் மாத்திரம் விளங்குகின்ற வளைகள் நெகிழும் படி மெலிந்து இன்னும் உயிருடன் இருக்கின்றேன்.

முடிபு:

தோழி, என்நலன் துறைவனொடு கண்மாறின்று: யானே சாஅய் இன்னும் உளென்.

கருத்து:

தலைவன் விரைவில் வரைந்துகொள்ளாவிடின் உயிர் தரியேன்.