குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 344

முல்லை - தலைவி கூற்று


முல்லை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பிரிந்த காலத்தில் வருந்திய தன்னை வற்புறுத்துந் தோழியை நோக்கி, “இக்காலத்தில் தம்மைப் பிரிந்து சென்ற தலைவர் வரப்பெறும் பேறுடைய மகளிர் தவஞ்செய்தாராவார்; யான் அதுபெற்றிலேன்” என்று தலைவி கூறியது.

நோற்றோர் மன்ற - தோழி! - தண்ணெனத்
தூற்றும் துவலைப் பனிக் கடுந் திங்கள்
புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு
நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல்
பால் வார்பு, குழவி உள்ளி, நிரை இறந்து, . . . . [05]

ஊர்வயின் பெயரும் புன்கண் மாலை,
அரும் பெறல் பொருட் பிணிப் போகிப் பிரிந்து
உறை காதலர் வர, காண்போரே.
- குறுங்குடி மருதனார்.

பொருளுரை:

தோழி! குளிர்ச்சி உண்டாகும்படி வீசுகின்ற துளிகளாகிய பனியையுடைய கடுமையாகிய மாதத்தில் மேய்புலத்தின் கண்ணேயுள்ள பயிரை அருந்திய தலைமையையுடைய ருதோடு நிலத்தளவும் நாலுகின்ற அலைதாடியை யுடையனவாகிய பால் நிரம்புதலாற் பருத்த முலைக்காம்பையுடைய மடியையுடைய பசுக்கள் பாலை ஒழுகவிட்டு தம் கன்றுகளை நினைந்து தம்மோடு ஒருங்கு மேயும் ஏனைய நிரைகளை நீங்கி ஊரினிடத்தே மீண்டு வருகின்ற துன்பத்தைத் தரும் மாலைக்காலத்தில் அரிதிற் பெறுகின்றபொருள்மேற் சென்ற நெஞ்சப் பிணிப்பினை நிறைவேற்றச் சென்று தம்மை முன்பிரிந்து உறைந்த தலைவர்கள் மீண்டுவரக்காணும் மகளிர் நிச்சயமாக தவஞ் செய்த வராவர்.

முடிபு:

தோழி, மாலையில் காதலர் வரக்காண்போர் நோற்றோர் மன்ற.

கருத்து:

தலைவர் இப்பொழுது வந்திலராதலின் யான் வருந்துவேன்.