குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 132

குறிஞ்சி - தலைவன் கூற்று


குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

பேரறிவுடைய நீ ஒரு மகள் திறத்து உள்ளமுடைதல் அழகோவென இடித்துரைத்த பாங்கனை நோக்கித் தலைவியின் இயல்பும் வனப்பும் கூறி, “இத்தகைய தன்மையுடையாளை யான் எங்ஙனம் மறந்தமைவேன்!” என்று தலைவன் சொல்லியது.

கவவுக் கடுங்குரையன்; காமர் வனப்பினள்;
குவவு மென் முலையள்; கொடிக் கூந்தலளே
யாங்கு மறந்து அமைகோ, யானே? - ஞாங்கர்க்
கடுஞ் சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி
தாய் காண் விருப்பின் அன்ன, . . . . [05]

சாஅய் நோக்கினள்-மாஅயோளே.
- சிறைக்குடியாந்தையார்.

பொருளுரை:

தோழ மாமையையுடைய தலைவி தழுவுவதில் விரைவுடையவள் விருப்பம் தரும் வனப்பை யுடையவள் குவிதலையுடைய மெல்லிய நகிலினையுடையவள; நீட்சியையுடைய கூந்தலையுடையவள் பக்கத்தில் மேயச் சென்ற மிக்க சுரப்பையுடைய நல்ல பசுவினது நடுங்கும் தலையையுடைய கன்று அத்தாய்ப் பசுவைக் காண வேண்டும் என விருப்பத்தோடு இருந்தாற் போன்ற விருப்பத்தை வெளிப்படுத்தும் மெலிந்த பார்வையையுடையவள்; ஆதலால் யான்! எப்படி அவளை மறந்து அமைவேன்!

முடிபு:

மாஅயோள், கவவுக்கடுங்குரையள்; வனப்பினள்; முலையள்; கூந்தலள்; நோக்கினள்; யான் யாங்கு மறந்தமைகு!

கருத்து:

தலைவி மறத்தற்கரிய இயல்புடையவள்.