குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 370

மருதம் - பரத்தை கூற்று


மருதம் - பரத்தை கூற்று

பாடல் பின்னணி:

“பரத்தை தலைவனைப் புறம்போகாவாறு பிணித்துக் கொண்டாள்” என்று தலைவி கூறியதாக அறிந்த பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்ப, “தலைவன் ஈண்டு இருப்பின் அவனோடு பொருந்தியும் அவன் பிரியின் யாம் தனித்தும் இருப்பேம்” என்று கூறியது.

பொய்கை ஆம்பல் அணி நிற்க கொழு முகை
வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு
இருப்பின், இரு மருங்கினமே; கிடப்பின்,
வில்லக விரலின் பொருந்தி; அவன்
நல் அகம் சேரின், ஒரு மருங்கினமே. . . . . [05]
- வில்லகவிரலினார்.

பொருளுரை:

பொய்கை ஆம்பலின் அழகிய நிறத்தை உடைய பெரிய மொட்டுக்களை மலரச் செய்யும் வண்டுகள் உள்ள, குளிர்ந்த துறையை உடைய ஊரில் உள்ள தலைவனோடு நான் இருக்கும் பொழுது, எங்கள் இரு உடல்களும் இணைந்து ஒன்றாக இருப்போம், வில்லில் இணைந்து இருக்கும் விரல்களைப் போல். அவன் தன் நல்ல இல்லத்திற்குச் சென்று விட்டால், நான் தனியாக, ஒற்றை ஆளாக இருக்க வேண்டி உள்ளது.

முடிபு:

ஊரனொடு இருப்பின் இருமருங்கினம்; கிடப்பின் பொருந்தி, சேரின் ஒரு மருங்கினம்.

கருத்து:

தலைவன் தன் விருப்பத்திற்கேற்ப ஒழுகாநிற்ப, யாம் அவன் ஒழுகியவாறே ஒழுகுவேம்.

குறிப்பு:

மருங்கினமே - ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:

பொய்கை ஆம்பல் அணி நிற கொழு முகை - பொய்கை ஆம்பலின் அழகிய நிறத்தை உடைய பெரிய மொட்டுக்கள், வண்டு வாய் திறக்கும் - வண்டுகள் மலரச் செய்யும், தண் துறை ஊரனொடு இருப்பின் - குளிர்ந்த துறையை உடைய ஊரில் உள்ள தலைவனோடு இருக்கும் பொழுது, இரு மருங்கினமே கிடப்பின் - இரு உடல்களும் அருகில் இருக்க, வில்லக விரலில் பொருந்தியவன் - வில்லை பிடித்திருக்கும் விரல்களைப் போல் இணைந்து இருப்போம், நல் அகம் சேரி ஒரு மருங்கினமே - அவன் தன் நல்ல இல்லத்திற்கு சென்று விட்டால் நான் தனியாக இருக்க நேரிடுகின்றது