குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 380

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் முன்பனிப் பருவத்தே வருவதாகக் கூறிச்சென்றானாகக் கூதிர்ப்பருவத்தின் இறுதியில் தோழி தலைவியை நோக்கி, “இனி, முன்பனிப் பருவம் வரும்; தலைவர் நம்மை நினைந்திலர்; என் செய்வேம்!” என்று கூறியது.

விசும்பு கண் புதையப் பாஅய், வேந்தர்
வென்று எறி முரசின் நன் பல முழுங்கி,
பெயல் ஆனாதே, வானம்; காதலர்
நனி சேய் நாட்டர்; நம் உன்னலரே;
யாங்குச் செய்வாம்கொல் - தோழி! - ஈங்கைய . . . . [05]

வண்ணத் துய்மலர் உதிர
முன்னர்த் தோன்றும் பனிக் கடு நாளே!
- கருவூர்க் கதப்பிள்ளை.

பொருளுரை:

தோழி! வானம் மறையும்படி பரவி, வேந்தர்கள் பகைவர்களை வென்று அறையும் முரசினைப் போல் நன்கு பலமுறை முழங்கி, மேகம் மழை பெய்தலை நீங்காது உள்ளது. நம் தலைவர் மிகத் தொலைவில் உள்ள நாட்டில் இருக்கின்றார். நம்மை அவர் எண்ணவில்லை, ஈங்கைச் செடியின் நிறத்தையும் உளையையும் உடைய மலர்கள் உதிரும்படி, நம் எதிரே வரும் கடுமையான பனிப்பருவத்தில் நாம் என்ன செய்யலாம்?

முடிபு:

தோழி, வானம் பெயல் ஆனாது; காதலர் நனிசேய் நாட்டர்; நம்முன்னலர்; பனிக்கடு நாளில்யாங்குச் செய்வோம்!

கருத்து:

தலைவர் தாம்குறித்த பருவத்தே வாராராயின் என்செய்வேம்!.

சொற்பொருள்:

விசும்பு கண் புதைய பாஅய் - வானம் மறையும்படி பரவி (பாஅய் - அளபெடை), வேந்தர் வென்று எறி முரசின் - வேந்தர்கள் பகைவர்களை வென்று அறையும் முரசினைப் போல் (முரசின் - இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு) நன் பல முழங்கிப் பெயல் ஆனாதே - நன்கு பலமுறை முழங்கி மழை பெய்தல் நீங்காது, வானம் - மேகம், காதலர் நனி சேய் நாட்டர் - தலைவர் மிகத் தொலைவில் உள்ள நாட்டில் இருக்கின்றார், நம் உன்னலரே - நம்மை அவர் நினைக்கவில்லை, யாங்குச் செய்வாம் கொல் தோழி - நாம் என்ன செய்யலாம் தோழி (கொல் - அசைநிலை), ஈங்கைய வண்ணத் துய் மலர் உதிர - ஈங்கைச் செடியின் நிறத்தையும் உளையையும் உடைய மலர்கள் உதிர, முன்னர்த் தோன்றும் பனிக் கடு நாளே - இனி நம் எதிரே வரும் கடுமையான பனிப்பருவத்தில்