குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 269

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் சிறைப்புறத்தானாக, தலைவி, "எந்தையும் யாயும் ஈண்டு இப்போது இலராதலின் தலைவன் என்னைக் காண்டற்கு இஃது எளியசெவ்வியென யாரேனும் அவன்பாற் சென்று சொல்லின் நன்றாம்" என்று தோழிக்குக் கூறியது.

சேயாறு சென்று, துனைபரி அசாவாது,
உசாவுநர்ப பெறினே நன்றுமன் தில்ல
வயச் சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும்
நீல் நிறப் பெருங் கடல் புக்கனன்; யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய . . . . [05]

உப்பு விளை கழனிச் சென்றனள்; அதனால்,
பனி இரும் பரப்பின் சேர்ப்பற்கு,
'இனி வரின் எளியள்' என்னும் தூதே.
- கல்லாடனார்.

பொருளுரை:

தோழி! என் தந்தையும் வலியை உடைய சுறாமீன் வீசியதனால் உண்டான புண் ஆறி மீண்டும் மீன் வேட்டை ஆடும் பொருட்டு நீல நிறத்தை உடைய பெரிய கடலினிடத்துப் புகுந்தனன்; என் தாயும் உப்பை விற்று வெண்ணெல்லை வாங்கி வரும் பொருட்டு அவ்வுப்பு உண்டாகின்ற அளத்திற்குச் சென்றாள்; அதனால்! குளிர்ச்சியை உடைய பெரிய பரப்பாகிய கடற்கரையை உடைய தலைவனுக்கு இப்பொழுது இங்கேவந்தால் தலைவி எளிதில் கண்டு பெறுதற்குரியள் என்னும் தூது மொழியை நெடுந்தூரமாகிய வழியைக் கடந்துபோய் விரையும் நடையினால் வருந்தாமல் கூறி உசாத் துணையாவாரைப் பெற்றால் மிக நல்லதாகும்; இஃது என் விருப்பம்.

முடிபு:

‘எந்தையும் கடல் புக்கனன்; யாயும் சென்றனள்; அதனால் இனி வரின் எளியள்' என்னும் தூதினைச் சேர்ப்பற்குக் கூறி உசாவுநர்ப் பெறின் நன்றுமன்.

கருத்து:

தலைவன் என்னோடு அளவளாவுதற்கேற்ற செவ்வி இது.