குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 069

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

இரவுக்குறியை விரும்பிய தலைவனை நோக்கி, "நீ இரவில் வருவை யாயின் நினக்குத் தீங்குண்டாகுமோ வென்றேண்ணி யாம் வருந்துவோம்; ஆதலின் நீ வாரற்க" என்று தோழி மறுத்துக் கூறியது.

கருங்கண் தாக் கலை பெரும் பிறிது உற்றென,
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி,
ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட! நடு நாள் . . . . [05]

வாரல்; வாழியோ! வருந்துதும் யாமே!
- கடுந்தோட் கரவீரனார்.

பொருளுரை:

தாவுகின்ற கரிய கண்ணையுடைய ஆண் குரங்கு ஒன்று மரணம் அடைந்ததால், கைம்மைத் துன்பத்தை நீக்க முடியாத, அதன் மீது காதல் கொண்ட அதன் பெண் குரங்கு அவர்களையுடைய முதிர்ச்சி அடையாத வலுவான குட்டியை உறவினர்களிடம் கொடுத்து விட்டு, உயர்ந்த மலையின் சரிவிலிருந்து குதித்து மரணம் அடையும் மலை நாடனே! நீ நீடு வாழ்வாயாக! நீ இனி நடு இரவில் இங்கு வராதே. அவ்வாறு நீ வந்தால் நானும் தலைவியும் மிகவும் வருத்தம் அடைவோம்.

குறிப்பு:

வாழியோ - ஓகாரம், அசை நிலை. யாமே - ஏகாரம், அசை நிலை. இரவுக்குறி மறுத்தது. பொ. வே. சோமசுந்தரனார் உரை - தாக்கலை என்றதன்கண் தாவுதற் தொழில் பெரும்பிறிதிற்குக் குறிப்பேதுவாய் நின்றது. கொம்பிழக்காது தாவும் தொழில் வல்ல குரங்கும் தப்பி வீழ்ந்து பெரும்பிறிதுற்றது என்றவாறு. எனவே, இருள் செறிந்த நெறியின் ஏதம் எடுத்துக்காட்டினாள் ஆயிற்று. இறைச்சி - திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - பெண் குரங்கு கைம்மையைக் கைக்கொள்ளாது அடுக்கத்துப் பாயும் சாரனாடன் என்றததானே,நின் மலையகத்து அஃறிணையாகிய விலங்கும் பேரறிவு உடையதாய் நீ மட்டிலும் களவைக் காதலித்து நல்லறமாகிய இல்லறத்தைக் கைக்கொண்டிலை; ஆகலின் நின் தகுதிக்கு இது தகாது என்பதாம். பறழ் - மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).

சொற்பொருள்:

கருங்கண் - கருமையான கண், தா - தாவும், வலிமையுடைய, கலை - ஆண் குரங்கு, பெரும்பிறிது - மரணம், உற்றன - அடைந்ததென, கைம்மை உய்யா - கைம்மை வருத்தத்தை தாங்க இயலாது, காமர் மந்தி - காதல் கொண்ட பெண் குரங்கு, அழகிய பெண் குரங்கு, கல்லா வன் பறழ் - மரம் ஏறுதல் முதலிய தம் தொழிலைக் கற்காத வலுவான தன் குட்டியை, கிளைமுதல் சேர்த்தி - உறவினர்களிடம் கொடுத்து விட்டு, ஓங்கு வரை அடுக்கத்து - உயர்ந்த மலையின் பக்கத்தில், பாய்ந்து உயிர் செகுக்கும் - பாய்ந்து உயிரைப் போக்கும், சாரல் - மலைச்சரிவு, மலைப்பக்கம், நாட - நாட்டவனே, நடுநாள் - நடு இரவில், வாரல் - வராதே, வாழியோ - நீ நீடு வாழ்வாயாக, வருந்துதும் யாமே - நாங்கள் வருந்துவோம்