குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 177

நெய்தல் - தோழி கூற்று


நெய்தல் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் மாலைக்காலத்தில் வருவானென்று தோழி தலைவிக்குக் கூறியது.

கடல் பாடு அவிந்து, கானல் மயங்கி,
துறை நீர் இருங் கழி புல்லென்றன்றே;
மன்றலம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும்; இன்று அவர்
வருவர் கொல் வாழி - தோழி! - நாம் நகப் . . . . [05]

புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சித்
தணப்பு அருங் காமம் தண்டியோரே?
- உலோச்சனார்.

பொருளுரை:

தோழி! கடலானதுஒலி அடங்க கடற்கரைச் சோலை மயக்கத்தையுடையதாக துறையையும் நீரையும் உடைய கரிய கழி பூக்கள் கூம்பியதனால் பொலிவழிந்தது; மன்றத்தின் கண் உள்ள அழகிய பனைமரத்தினது மடலின் கண்ணே பொருந்திய வாழ்க்கையையுடைய அன்றிற் பறவையும் மெல்ல கூவும்; முன்புநாம் தம்மைப் புலந்தாலும் அவ்விடத்துப் பிரிதலை அஞ்சி நீங்குதற்கரிய காம இன்பத்தை அலைத்தும் பெற்றவராகிய தலைவர் இன்று வருவர்.

முடிபு:

தோழி, கழி புல்லென்றன்று; அன்றிலும் நரலும்; தண்டியோர் இன்று வருவர்.

கருத்து:

தலைவர் இன்று வருவர்.