குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 179

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

பகலில் வந்து தலைவியோடு அளவளாவிய தலைவனை நோக்கி,“எம் ஊருக்கு வந்து இரவில் தங்கிச் செல்வாயாக” என்று தோழி கூறியது.

கல்லென் கானத்துக் கடமா ஆட்டி,
எல்லும் எல்லின்று, ஞமலியும் இளைத்தன,
செல்லல் ஐஇய, உது எம் ஊரே,
ஓங்கு வரை அடுக்கத்துத் தீந்தேன் கிழித்த,
குவை உடைப் பசும் கழை தின்ற கயவாய்ப் . . . . [05]

பேதை யானை சுவைத்த,
கூழை மூங்கில் குவட்டு இடை அதுவே.
- குட்டுவன் கண்ணனார்.

பொருளுரை:

ஐயா! ‘கல்’ என்னும் ஆரவாரத்தையுடைய காட்டில், கடமாவை விரட்டித் துன்புறுத்தி உன்னுடைய வேட்டை நாய்களும் இளைத்துவிட்டன. பகற்பொழுதும் கழிந்து இப்பொழுது இருட்டி விட்டது. உன்னுடைய ஊர்க்கு நீ இந்த வேளையில் செல்லாதே!

உயர்ந்த மலைப் பக்கத்தில் இனிய தேன் கூடுகளைக் கிழித்த, கூட்டமாக வளர்ந்துள்ள, பசுமையான மூங்கிலைப் பெரிய வாயையுடைய பேதமையுடைய யானை தின்றதால் கூழையாகிய மூங்கிலையுடைய மலை உச்சியின் இடையே உள்ளது எங்கள் ஊர். எங்கள் ஊரில் தங்குவாயாக.

குறிப்பு:

வரைவு கடாயது. அதுவே - ஏகாரம் அசைநிலை. உ. வே. சாமிநாதையர் உரை - சொல்லல் என்றும் உது எம் ஊர் என்றும் கூறியதால், நீ போகாமல் எம்முடன் வந்து இரவில் தங்கிச் செல்வாயாக என்றாளாயிற்று. இதனால் இடையறாது உடனுறைய வேண்டுமானால் தம் விருப்பத்தை உணர்த்தி, அங்ஙனம் இருத்தற்கு ஏற்ற நிலை வரைந்துகொண்டு இல்லறம் நடத்தலே என்பதை உய்த்துணர வைத்தாள்.

சொற்பொருள்:

கல்லென் கானத்து - கல் என்னும் ஆரவாரத்தையுடைய காட்டில், கடமா ஆட்டி, கடமாவை விரட்டித் துன்புறுத்தி, எல்லும் எல்லின்று - பகற்பொழுதும் இருட்டி விட்டது, ஞமலியும் இளைத்தன - வேட்டை நாய்களும் இளைத்தன, செல்லல் - உன் ஊர்க்கு செல்லாதே, ஐஇய - ஐயா (சொல்லிசை அளபெடை), உது எம் ஊரே - அங்கு இருப்பது எங்கள் ஊர், ஓங்கு வரை அடுக்கத்து - உயர்ந்த மலைப் பக்கத்தில், தீந்தேன் கிழித்த - இனிய தேன் கூடுகளைக் கிழித்த, குவை உடைப் பசும் கழை தின்ற - மலை உச்சியில் உள்ள கூட்டமாக வளர்ந்துள்ள பசுமையான மூங்கிலைத் தின்ற, கயவாய்ப் பேதை யானை - பெரிய வாயையுடைய பேதமையுடைய யானை, சுவைத்த கூழை மூங்கில் - தின்றதால் கூழையாகிய மூங்கில், குவட்டு இடை அதுவே - உச்சியின் இடையே உள்ளது