குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 399

மருதம் - தலைவி கூற்று


மருதம் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

வரைவு நீட்டித்த காலத்துத் தலைவி தோழியை நோக்கி, “தலைவர் உடனுறையின் நீங்கியும் பிரியின் ஒன்றியும் நிற்கின்றது பசலை” என்றுகூறியது.

ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க
பாசி அற்றே பசலை - காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி,
விடுவுழி விடுவுழிப் பரத்தலானே.
- பரணர்.

பொருளுரை:

என் காதலர் என்னைத் தொடும் பொழுதெல்லாம் நீங்கி, அவர் பிரியும் பொழுதெல்லாம் என் மேனியில் பரவுவதாலே, இந்தப் பசலையானது, ஊர் மக்களால் குடிக்கப்படும் நீரை உடைய குளத்தின் துறையில் கூடிய பாசியை ஒத்தது.

முடிபு:

பசலை, நீங்கிப் பரத்தலான் பாசியற்று.

கருத்து:

பசலைநோய் மிக்கமையால் யான் வருந்துவேனாயினேன்.

குறிப்பு:

அற்றே - ஏகாரம் அசைநிலை, பரத்தலானே - ஏகாரம் அசை நிலை. கலித்தொகை 130 - விடுவழி விடுவழிச் சென்றாங்கு அவர் தொடுவழித் தொடுவழி நீங்கின்றால் பசப்பே. உ. வே. சாமிநாதையர் உரை - தொடுதல் இடக்கரடக்கு. விடுவுழி விடுவுழி எனப் பன்மை கூறியது வரையாது ஒழுகும் களவொழுக்கத்தில் அடுத்தடுத்துப் பிரிவு நேர்வது குறித்தது.

சொற்பொருள்:

ஊர் உண் கேணி - ஊர் மக்கள் குடிக்கும் நீரை உடைய சிறு குளம்/ கிணறு, உண் துறை - நீர் உண்ணும் துறை, நீர் உண்ணும் கரை, தொக்க - கூடிய, பாசி அற்றே - பாசியைப் போன்றது, பசலை - பசலை (காதல் வசப்பட்டிருக்கும் பெண்ணின் தோலில் ஏற்படும் மஞ்சள் நிறமான தேமல்), காதலர் - காதலர், தொடுவுழித் தொடுவுழி - தொடும் பொழுதெல்லாம், தொடும் பொழுதெல்லாம், நீங்கி - விலகி, விடுவுழி விடுவுழி - பிரியுந்தோறும், பிரியுந்தோறும், பரத்தலானே - அது பரவுவதால்