குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 152

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் நெடுங்காலம் வரையாது இருந்தமையின் வருந்திய தன்னை இடித்துரைத்த தோழியை நோக்கி முன்னிலைப் புறமொழியாக, “என்னை இடித்துரைப்போர் காமத்தின் தன்மையையும் தலைவர் உடனுறைவதன் இன்றியமையாமையையும் உணர்ந்திலர்” என்று தலைவி கூறியது.

யாவதும் அறிகிலர் கழறுவோரே,
தாய் இல் முட்டை போல உள் கிடந்து
சாயின் அல்லது பிறிது எவன் உடைத்தோ,
யாமைப் பார்ப்பின் அன்ன,
காமம் காதலர் கையற விடினே? . . . . [05]
- கிளிமங்கலங்கிழார்.

பொருளுரை:

தாய் முகத்தைப் பார்த்து வளரும் தன்மையுடையது ஆமையின் குட்டி. தலைவரைப் பலகாலும் கண்டால் வளரும் தன்மையுடையது காதல். அவர் நான் செயலறும்படி என்னைக் கைவிட்டால், தாயில்லாத முட்டை கிடந்து அழிவது போல், உள்ளத்தின் உள்ளே இருந்து அழிவதைத் தவிர, வேறு என்னவாகும்? என்னை இடித்து உரைப்பவர்கள் இதனைச் சிறிதேனும் அறியாதவர்கள்.

குறிப்பு:

கழறுவோரே: ஏகாரம் அசை நிலை, உடைத்தோ - ஓகாரம் அசை நிலை, விடினே - ஏகாரம் அசை நிலை, பார்ப்பின் - இன் வேண்டாவழிச் சாரியை. ஐங்குறுநூறு 44 - தீம் பெரும் பொய்கை யாமை இளம் பார்ப்புத் தாய் முகம் நோக்கி வளர்ந்திசினா அங்கு அதுவே ஐய நின் மார்பே.

சொற்பொருள்:

யாவதும் அறிகிலர் - சிறிதேனும் அறியாதவர்கள், கழறுவோரே - என்னை இடித்துரைப்பவர்கள், தாய் இல் முட்டை போல - தாய் இல்லாத முட்டையைப் போல், உள் கிடந்து - உள்ளே கிடந்து, சாயின் அல்லது - அழிவதைத் தவிர, பிறிது எவன் உடைத்தோ - வேறு என்ன உள்ளது, யாமைப் பார்ப்பின் அன்ன - ஆமையின் குட்டியைப் போன்றது, காமம் - காதல், காதலர் கையற விடினே - அவர் என்னை செயலறும்படி கைவிட்டால்