குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 259

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தோழி அறத்தொடு நின்றபின், அங்ஙனம் தான் செய்ததைத் தலைவன் அறிந்தால் வரைந்து கொள்ளுவதற்குரிய முயற்சிகளைச் செய்வானென்று தான் எண்ணியதைத் தலைவிக்கு உணர்த்துவாளாய், "பொய் சொல்லுவதில் பயன் யாது? தலைவன் நன்னெஞ்சமுடையான்" என்று கூறியது.

மழை சேர்ந்து எழுதரு மாரிக் குன்றத்து,
அருவி ஆர்ந்த தண் நறுங் காந்தள்
முகை அவிழ்ந்து, ஆனா நாறும் நறு நுதல்,
பல் இதழ் மழைக் கண், மாஅயோயே!
ஒல்வை ஆயினும், கொல்வை ஆயினும், . . . . [05]

நீ அளந்து அறிவை நின் புரைமை; வாய்போல்
பொய்ம் மொழி கூறல் - அஃது எவனோ?
நெஞ்சம் நன்றே, நின் வயினானே.
- பரணர்.

பொருளுரை:

மேகங்கள் சேர்ந்து எழுந்த மழையை உடைய மலையின் இடத்துள்ள அருவிக்கு அருகில் பொருந்திய தண்ணிய நறிய காந்தளரும்புகள் விரிந்து அமையாதனவாய் மணம் வீசுகின்ற நறிய நெற்றியையும் பல இதழை உடைய தாமரைப் பூவைப் போன்ற குளிர்ச்சியை உடைய கண்ணையும் உடைய மாமை நிறம் பொருந்தியோய் நீ என் பிழையைப் பொறுப்பாயாயினும் அன்றிச் சினந்து கொல்வாயாயினும் நினது உயர்வை நீயே அளவிட்டு அறியும் ஆற்றலை உடையை; மெய்யைப் போலப் பொய் வார்த்தைகளை கூறுதலாகிய அஃது என்ன பயனைத் தரும்? நின் திறத்து தலைவனது நெஞ்சு நலமுடையது.

முடிபு:

மாஅயோயே, நின் புரைமை நீ அறிவை; பொய்ம்மொழி கூறல் எவன்? நன் வயினான் நெஞ்சம் நன்று.

கருத்து:

நான் அறத்தொடு நின்றதனால் நன்மையே விளையும்.