குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 001

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் செங்காந்தள் பூவைக் கையுறையாகக் கொடுத்துத் தோழியிடம் தன் குறை கூறிய வழி, அவள் “இஃது எங்கள் மலையிடத்தும் உள்ளதாகலின் இதனை வேண்டேம்” என்று மறுத்துக் கூறியது.

செங்களம் படக் கொன்ற அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின் செங்கோட்டி யானைக்
கழல் தொடிச் சேஎய் குன்றம்,
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.
- திப்புத் தோளார்.

பொருளுரை:

போர்க்களம் குருதியால் செந்நிறம் ஆகும்படி அசுரர்களைக் கொன்று அழித்த, குருதியால் சிவந்த திரண்ட அம்பையும், குருதியால் சிவந்த தந்தத்தையுடைய யானையையும் நெகிழுமாறு அணியப்பட்ட தொடியையும் உடைய முருகக் கடவுளின் இம்மலையானது சிவந்த காந்தள் மலர்களையுடையது.

குறிப்பு:

கையுறையை மறுத்தது. பொ. வே. சோமசுந்தரனார் உரை - இச் செய்யுளை பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் ‘தோழி தலைவியை இடதுய்த்து நீக்கியத்து’ என்னும் துறைப்படுத்தோதுவர். அஃதாவது, தலைமகனது வரவு உணர்ந்த தோழி தலைமகளைப் பொழிலின்கண் ஒரு குறியிடத்தே கொண்டு சென்று, “சேஎய்குன்றம் குருதிப் பூவின் குலைக்காந்தட்டு ஆண்டுத் தெய்வம் உறைதலின் நின்னால் வரப்படாது; யான் சென்று கொய்து வருவேன்; நீ அதுகாறும் இப்பொழிலிடத்தே நிற்கக்கடவாய்” என நிறுத்தி நீங்குதல் என்பதாம். கையுறை - உ. வே. சாமிநாதையர் உரை - கையின்கண் சேர்ப்பது. தமிழண்ணல் உரை - எங்களிடம் இருப்பதால் வேண்டாம் என மறுக்கும் சொல் பாடலில் இல்லை. சொல் எஞ்சி குறைந்து நிற்பதால் இதைச் ‘சொல்லெச்சம்’ என்பர். திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - அம்பின், பூவின் என்பவற்றிலுள்ள ‘இன்’ சாரியைகள். காந்தட்டே - ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:

செங்களம் பட - போர்க்களம் குருதியால் செந்நிறம் ஆகும்படி, கொன்ற அவுணர்த் தேய்த்த - அசுரர்களைக் கொன்று அழித்த, செங்கோல் அம்பின் - சிவந்த திரண்ட அம்பையும், செங்கோட்டி யானை - சிவந்த தந்தத்தையுடைய யானை, கழல் தொடி - நெகிழுமாறு அணிந்த தொடி, சேஎய் குன்றம் - முருகக் கடவுளின் குன்றம் (சேஎய் - இன்னிசை அளபெடை), குருதிப் பூவின் குலைக் காந்தட்டே - சிவந்த காந்தள் மலர்களையுடையது