குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 254

பாலை - தலைவி கூற்று


பாலை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வருவதாகக் கூறிச் சென்ற பருவம் வரவும் அவன் வாரானாக, வருந்திய தலைவியை நோக்கி, "நீ ஆற்றல் வேண்டும்" என்று வற்புறுத்திய தோழிக்கு, "அவர் கூறிய பருவம் வந்த பின்னரும் அவர் வருவார் எனச் சொல்லும் தூதுகள் வந்தில; அவர் என்னை மறந்தனர்" என்று தலைவி கூறியது.

இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப,
முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின்
தலை அலர் வந்தன; வாரா - தோழி!
துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர்;
பயில் நறுங் கதுப்பின் பாயலும் உள்ளார் . . . . [05]

'செய்பொருள் தரல் நசைஇச் சென்றோர்
எய்தினரால்' என, வரூஉம் தூதே.
- பார்காப்பானார்.

பொருளுரை:

தோழி! இலை இல்லாத அழகிய கிளையினிடத்துத் திரளாகிய வண்டுகள் ஆரவாரிக்கும்படி நகிலை ஒத்த மெல்லிய அரும்புகள் விரிந்த கோங்க மரத்தினது முதற்பூக்கும் மலர்கள் தோன்றின; ஈட்டுதற்குரிய பொருளைக் கொண்டு வருதலை விரும்பிச் சென்ற தலைவர் மீண்டு வந்தனரென்று அறிவித்தற்கு வரும் தூதுகள் வந்தில; நம்மைப் பிரிந்து சென்ற அவர் துயிலுதலினிய இராக் காலத்தில் உடன் துயிலுதலை மறந்தனர்; தாம் பழகுகின்ற நறிய என் கூந்தலாகிய அணையையும் நினையாராயினர்.

முடிபு:

தோழி, அலர் வந்தன; தூது வாரா; அவர் மறந்தனர்; உள்ளார்.

கருத்து:

தலைவர் என்னை மறந்தனர் போலும்.