குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 148

முல்லை - தலைவி கூற்று


முல்லை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் மீண்டு வருவதாகக் கூறிச் சென்ற கார்ப் பருவம் வரவும் அவன் வாராமையால் துன்பமுற்ற தலைவியை நோக்கித் தோழி, “இது பருவமன்று; அவர் பொய்யார்” என வற்புறுத்த, தலைவி, “கொன்றைமரங்கள் பூத்தன; இது கார்ப்பருவந்தான்” எனக் கூறியது.

செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த
தவளை வாய பொலஞ்செய் கிண்கிணிக்
காசினன்ன போது ஈன் கொன்றை
குருந்தோடு அலம்வரும் பெருந்தண் காலையும்
கார் அன்று என்றி ஆயின் . . . . [05]

கனவோ மற்றிது வினவுவல் யானே.
- இளங் கீரந்தையார்.

பொருளுரை:

பணக்காரக் குழந்தைகளின் சிறியக் கால்களில், தவளை வாயைப் போன்ற வாயை உடைய, ஒலிக்கும் மணிகளுடன் அணியப்பட்ட கொலுசுகளில் உள்ள பொன்னால் செய்த காசுகளைப் போன்ற மலர் அரும்புகளையுடைய கொன்றை மரங்கள் குருந்த மரங்களுடன் சுழலும் காற்றில் அசைகின்றன. இது கார்காலம் இல்லை என்று நீ கூறுவாய் ஆயின், நீ கனவு காண்கின்றாயா என்று நான் கேட்பேன்.

குறிப்பு:

மற்றிது - மற்று - அசைநிலை, யானே - ஏகாரம் அசை நிலை. கனவோ - ஓகாரம் வினா, கலித்தொகை 86 - தேரைவாய்க் கிண்கிணி.

சொற்பொருள்:

செல்வச் சிறாஅர் - பணக்காரச் சிறுவர்கள், சிறு அடி பொலிந்த - சிறிய கால்களில் விளங்கிய, தவளை வாய - தவளை வாயைப் போன்ற வாயை உடைய, பொலஞ்செய் கிண்கிணி - பொன்னால் செய்த கொலுசு, காசினன்ன - காசைப் போன்ற, போது ஈன் கொன்றை - மலர் மொட்டை ஈன்ற கொன்றை, சரக்கொன்றை, Laburnum, Golden Shower Tree, Cassia sophera, குருந்தோடு அலம் வரும் - குருந்த மரத்தோடு (Indian Atalantia, citrus variety) சுழலும், பெருந்தண் காலையும் - மிகுந்த குளிர்ச்சியுடைய பருவத்தையும், கார் அன்று என்றி ஆயின் - கார் காலம் இல்லை என்று நீ சொல்வது ஆனால், இது - இது, கனவோ மற்றிது - மற்று இது கனவோ, வினவுவல் யானே - நான் கேட்பேன்.