குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 222

குறிஞ்சி - தலைவன் கூற்று


குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

தலைவியும் தோழியும் நீராடி ஒருங்கிருந்த இடத்து அத்தோழியின்பால் தலைவிக்குளதாய ஒற்றுமையை அறிந்து, “இவளே தலைவியை நாம் பெறுதற்குரிய வாயில்; இனி இவள் வாயிலாக நாம் இரந்து குறைபெறுதும்” என்று தலைவன் நினைந்தது.

தலைப் புணைக் கொளினே, தலைப் புணைக் கொள்ளும்;
கடைப் புணைக் கொளினே, கடைப் புணைக் கொள்ளும்;
புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின்,
அண்டும் வருகுவள் போலும் - மாண்ட
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகைச் . . . . [05]

செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண்
துளி தலைத் தலைஇய தளிர் அன்னோளே.
- சிறைக்குடி யாந்தையார்.

பொருளுரை:

மாட்சிமைப்பட்ட மழைக் காலத்தில் மலரும் பிச்சியினது நீர் ஒழுகும் வளவிய அரும்பினது சிவந்த புறத்தை யொத்த கொழுவிய கடையையும் குளிர்ச்சியையும் உடைய கண்களையும் மழைத்துளி தன்னிடத்தே பெய்யப் பெற்ற தளிரைப் போன்ற மென்மையையும் உடைய தலைவி தெப்பத்தின் தலைப்பை இத்தோழிகைக் கொண்டால் தானும் அதன் தலைப்பைக் கைக் கொள்வாள்; இவள் தெப்பத்தின் கடைப்பகுதியைப் பிடித்துக் கொள்ளின் தலைவியும் அதன் கடைப் பகுதியைக் கொள்வாள்; தெப்பத்தைக் கைசோர விட்டு நீரோடு இவள் சென்றால் அங்கும் தலைவி வருவாள் போலும்.

முடிபு:

தளிரன்னோள் தலைப்புணைக் கொளின்தலைப் புணைக் கொள்ளும்; கடைப்புணைக் கொளின் கடைப்புணைக் கொள்ளும்; ஒழுகின் வருகுவள் போலும்.

கருத்து:

இத்தோழி தலைவியோடு மனமொத்த நிலையினள்.