குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 080

மருதம் - பரத்தை கூற்று


மருதம் - பரத்தை கூற்று

பாடல் பின்னணி:

தலைவி தன்னைப் புறங்கூறினாளென்று கேட்ட பரத்தை அத் தலைவிக்குப் பாங்காயினார் கேட்ப, “நானும் தலைவனும் புதுப்புனலாடப் புகுகின்றோம்: அவள் வலியுடையளாயின் தலைவனை வாராமற் காப்பாளாக!” என்று தன் வன்மைமிகுதி தோன்றத் தன்னை வியந்து கூறியது.

கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சிப்
பெரும் புனல் வந்த இரு துறை விரும்பி
யாம் அஃது அயர்கம் சேறும், தான் அஃது
அஞ்சுவது உடையள் ஆயின், வெம் போர்
நுகம் படக் கடக்கும் பல் வேல் எழினி . . . . [05]

முனை ஆன் பெரு நிரை போலக்
கிளையொடும் காக்க, தன் கொழுநன் மார்பே.
- ஔவையார்.

பொருளுரை:

கூந்தலில் வெண்குவளை மலர்களின் புற இதழ்களை ஒடித்த முழு மலர்களை அணிந்து, வெள்ளம் வந்த பெரிய நீர்த்துறையில் விருப்பத்துடன் நாம் அங்கு விளையாடுவதற்குச் செல்வோம். நாம் தலைவனுடன் நீரில் விளையாடுவதற்கு, தலைவி அஞ்சுவாளாயின், பகைவரை நடுநிலைமையுடன் கொல்லும் பல வேற்படையை உடைய எழினி என்பவன் போர் முனையில் உள்ள தன் பசுக்களைக் காப்பது போல, தன்னுடைய உறவினர்களுடன் காப்பாளாக அவளது கணவனின் மார்பை.

குறிப்பு:

எழினி என்பது அதியமான் நெடுமான் அஞ்சி. அகநானூறு 105 - பல் வேல் எழினி கெடல் அருந் துப்பின் விடு தொழில் முடிமார் கனை எரி நடந்த கல் காய் கானத்து வினை வல் அம்பின் விழுத்தொடை மறவர் தேம் பிழி நறுங்கள் மகிழின் முனை கடந்து வீங்கு மென் சுரைய ஏற்று இனம் தரூஉம், அகநானூறு 372 நெடுநெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி கடுமுனை அலைத்த கொடு வில் ஆடவர் ஆ கொள் பூசலின். மலரின் புறவிதழ் நீக்குதல் - புறநானூறு 116 - முழு நெறி, கலித்தொகை 143 - நெய்தல் நெறிக்க, குறுந்தொகை 80 - முழு நெறி, நற்றிணை 138 - பூவுடன் நெறிதரு. கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சி (1) - உ. வே. சாமிநாதையர் உரை - கூந்தற்கண் ஆம்பலின் புற இதழ் ஒடித்த முழுப் பூவை செருகி, பொ. வே. சோமசுந்தரனார் உரை, இரா. இராகவையங்கார் உரை - ஆம்பலினுடைய கூந்தல் போன்ற நெறிப்பினையுடைய முழு நெறித் தழையை உடுத்து. நுகம்பட (5) - உ. வே. சாமிநாதையர் உரை - நடுநிலைமையுண்டாகும்படி, நுகம் - நுகத்தின் தன்மை, நடுவு நிலைமை, இங்கே ஆகுபெயர், நச்சினார்க்கினியர் உரை மலைபடுகடாம் 87 - வலியுண்டாக. மார்பே: ஏகாரம், அசை நிலை.

சொற்பொருள்:

கூந்தல் - கூந்தல், ஆம்பல் - வெண்குவளை மலர்கள், முழு நெறி அடைச்சி - புற இதழ்கள் ஒடித்த முழு மலர்களை அணிந்து, பெரும் புனல் வந்த இருந்துறை - வெள்ளம் வந்த பெரிய நீர்த்துறை, விரும்பி - விரும்பி, யாம் அஃது அயர்கம் - நாம் அங்கு விளையாடுவோம், சேறும் - செல்வோம், தான் - தலைவி, அஃது - நாம் தலைவனுடன் விளையாடுவது, அஞ்சுவது உடையள் ஆயின் - அவள் அஞ்சுவாளாயின், வெம் போர் நுகம் படக் கடக்கும் - கடுமையான போரில் பகைவரை நடுநிலைமையுடன் கொல்லும், விரும்பிய போரில் பகைவரை நடுநிலைமையுடன் கொல்லும், பல் வேல் எழினி - பல வேற்படையை உடைய எழினி, முனை ஆன் பெரு நிரை போல - போர் முனையில் உள்ள பசுக்களைப் போல, கிளையொடும் காக்க தன் கொழுநன் மார்பே - உறவினர்களுடன் காப்பாளாக அவளது கணவனின் மார்பை