குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 100

குறிஞ்சி - தலைவன் கூற்று


குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பாங்கனுக்கு, “யான் ஒரு மலைவாணர் மகளைக் காமுற்றேன்; அவள் பெறுதற்கரியள்” என்று கூறியது.

அருவி பரப்பின் ஐவனம் வித்தி
பரு இலை குளவியொடு பசு மரல் கட்கும்
காந்தள் வேலி சிறு குடி பசிப்பின்
கடு கண் வேழத்து கோடு நொடுத்து உண்ணும்
வல்வில் ஓரி கொல்லி குடவரை . . . . [05]

பாவையின் மட வந்தனளே
மணத்தற்கு அரிய பணை பெரு தோளே.
- கபிலர்.

பொருளுரை:

தோழி! அருவி பாயும் பரந்த நிலத்தில் மலைநெல்லை விதைத்து இடையிலே களையாக முளைத்த பருத்த இலையையுடைய மலைமல்லிகையோடு பசியமரலை களைந்தெறியும் காந்தளையே இயற்கை வேலியாகவுடைய சிற்றூரிலுள்ளார் உணவின்றிப் பசித்தாராயின் தறுகண்மையையுடைய யானையினது கொம்பை விற்று அவ்விலையால் வரும் உணவை உண்ணுதற்கிடமாகிய வலிய வில்லையுடைய ஓரியினது கொல்லிமலையின் மேல்பக்கத்திலுள்ள பாவையைப் போல நான் கண்டு காமுற்ற மகள் மடப்பம் வரப்பெற்றாள்; ஆயினும் அவளுடைய மூங்கிலைப்போன்ற பெரிய தோள்கள் தழுவுதற்கு அரியனவாகும்.

முடிபு:

நான் கண்டு காமுற்ற மகள் மடவந்தனள்: அவள் தோள் மணத்தற்கரிய.

கருத்து:

என் மனங்கவர்ந்த தலைவி பெறுதற்கரியள்.