குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 356

பாலை - செவிலி கூற்று


பாலை - செவிலி கூற்று

பாடல் பின்னணி:

தலைவி தலைவனுடன் போயினபின், “என்மகள் எங்ஙனம் பாலையிற் செல்லும் ஆற்றல் பெற்றாள்?” என்று செவிலி கூறி வருந்தியது.

நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆர் இடைக்
கழலோன் காப்பப் கடுகுபு போகி,
அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த
வெவ் வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய
யாங்கு வல்லுநள்கொல் தானே - ஏந்திய . . . . [05]

செம்பொற் புனை கலத்து அம் பொரிக் கலந்த
பாலும் பல என உண்ணாள்,
கோல் அமை குறுந் தொடித் தளிர் அன்னோளே?
- கயமனார்.

பொருளுரை:

கையிலேந்திய செம்பொன்னாலாகிய புனைந்த பாத்திரத்தில் உள்ள அழகிய பொரியோடு கலந்த பாலையும் மிக்கன என்று கூறி உண்ணாளாகிய திரட்சியமைந்தகுறிய வளையையணிந்த தளிரை ஒத்தமென்மையையுடைய என்மகள் நிழல் அடங்கி அற்றுப் போன நீர் இல்லாத கடத்தற்கரிய பாலை நிலத்தினிடத்தே வீரக்கழலையுடைய தலைவன் தன்னைப் பாதுகாப்ப விரைந்து சென்று நீர்வளமற்ற சுனையின் பக்கத்தில் உலர்ந்து வெம்மையைக் கொண்ட மிக்க வெப்பத்தை யுடைய கலங்கல் நீரை தவ்வென்னும் ஓசைபட குடிக்க எவ்வாறு வலிய ளானாள்?

முடிபு:

உண்ணாளாகிய தளிரன்னோள், போகிக் குடிக்கிய யாங்குவல்லுநள்?.

கருத்து:

என் மகள் எங்ஙனம் பாலைநிலத்திற் செல்லும் வன்மையை யுடையளானாள்?