குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 381

நெய்தல் - தோழி கூற்று


நெய்தல் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

வரைவிடை ஆற்றாளாகிய தலைவியை நோக்கி, “தலைவனோடு அளவளாவியதன் பயன் இங்ஙனம் வருந்தியிருத்தல் கொல்?” என்று தோழி கூறியது.

தொல் கவின் தொலைந்து, தோள் நலம் சாஅய்
அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாது,
பசலை ஆகி, விளிவது கொல்லோ
வெண் குருகு நரலும் தண் கமழ் கானல்,
பூ மலி பொதும்பர் நாள்மலர் மயக்கி, . . . . [05]

விலங்கு திரை உடைதரும் துறைவனொடு
இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே?
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

பொருளுரை:

வெள்ளை நாரைகள் ஒலிக்கின்ற தண்ணியதாகக் கமழ்கின்ற கடற்கரையிலேயுள்ள மலர் நிறைந்த சோலையிலுள்ள செவ்வி மலர்களைக் கலக்கச்செய்து குறுக்கிடும் அலைகள் உடைந்து செல்கின்ற துறையையுடைய தலைவனோடு விளங்குகின்ற பற்கள் வெளிப்டச் சிரித்து மகிழ்ந்ததனால் உண்டான பயன் பழைய அழகு அழிய தோளினது நலம்மெலிய துன்பத்தையுடைய நெஞ்சோடு இரவுதோறும் தூங்காமல் பசலை உண்டாக நாம் அழிவதுவோ?

முடிபு:

நக்கதன் பயன் விளிவதுகொல்?

கருத்து:

தலைவனோடு நட்புச் செய்ததற்கு நாம் அழிதலோ பயன்?