குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 046

மருதம் - தலைவி கூற்று


மருதம் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றமாட்டாள் என்று வருத்திய தோழியிடம் ‘என்னுடைய பிரிவினால் தலைவர் துன்புறுவார்’. ஆதலின் விரைந்து வருவார் எனத் தலைவி கூறியது.

ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து
எருவின் நுண் தாது குடைவன ஆடி,
இல் இறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும் . . . . [05]

புன்கண் மாலையும் புலம்பும்
இன்று கொல் தோழி, அவர் சென்ற நாட்டே?
- மாமலாடனார்.

பொருளுரை:

ஆம்பல் மலரின் காய்ந்த இதழ்களை ஒத்த குவிந்த சிறகுகளையுடைய இல்லத்தில் தங்கும் குருவிகள், முற்றத்தில்காயப்போட்ட உணவுப் பொருட்களை உண்டு, பொது இடத்தில் உள்ள எருவாகிய நுண்ணிய துகளில் கிளறி விளையாடி இல்லத்தின் இறைப்பகுதியில் (மழையும் வெயிலும் படாத கூரைக்கு கீழ் உள்ள இடம்) தம் குஞ்சுகளுடன் தங்குவதற்கு காரணமான பிரிந்தவர்களுக்குத் துன்பத்தைத் தரும் மாலைக்காலமும் தனிமையும், அவர் சென்ற நாட்டில் இல்லையோ தோழி?

குறிப்பு:

எரு - சாணம். நற்றிணை 343 - தாது எரு மறுகின், நற்றிணை 271 - பைந்தாது எருவின் வைகு, கலித்தொகை 103 - தாது எரு மன்றத்து, கலித்தொகை 108 - தாது உக்கன்ன தாது எரு மன்றத்து, புறநானூறு 33 - தாது எரு மறுகின், புறநானூறு 215 - தாது எரு மறுகின், புறநானூறு 311 - தாது எரு மறுகின். இறைச்சி - தமிழண்ணல் உரை - ஊர்க்குருவி பற்றிய காட்சி இறைச்சி எனப்படும். கருப்பொருளின் ‘வாழ்வை’ உரிப்பொருள் போலச் சுட்டும் இது. வருந்திய காலத்தில் வற்புறுத்தப் பயன்படுகிறது. சிறகர் - சிறகு என்பதன் போலி, குரீஇ - சொல்லிசை அளபெடை, கொல் - ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், நாட்டே - ஏகாரம் அசைநிலை. எருவின் நுண் தாது (4) - உ. வே. சாமிநாதையர் உரை - நுண்ணிய உலர்ந்த சாணத்தின் பொடி, தமிழண்ணல் உரை - நுண்ணிய சாணப்பொடி, இரா. இராகவையங்கார் உரை - நுண்ணிய பூழி (புழுதி). புலம்பு - புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:

ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன - ஆம்பல் மலரின் காய்ந்த இதழ்களை ஒத்த, கூம்பிய சிறகர் - குவிந்த சிறகுகளையுடைய, மனை உறை குரீஇ - இல்லத்தில் தங்கும் குருவிகள், முன்றில் உணங்கல் மாந்தி - முற்றத்தில்காயப்போட்ட உணவுப் பொருட்களை உண்டு (முன்றில் - இல்முன்), மன்றத்து - பொது இடத்தில் உள்ள, எருவின் நுண் தாது குடைவன ஆடி - எருவாகிய நுண்ணிய துகளில் கிளறி விளையாடி, இல் இறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும் - இல்லத்தின் இறைப்பகுதியில் (மழையும் வெயிலும் படாத கூரைக்கு கீழ் உள்ள இடம்) தம் குஞ்சுகளுடன் வதிக்கும், புன்கண் மாலையும் - பிரிந்தவர்களுக்குத் துன்பத்தைத் தரும் மாலைக்காலமும், புலம்பும் - தனிமையும், இன்று கொல் தோழி, அவர் சென்ற நாட்டே - அவர் சென்ற நாட்டில் இல்லையோ தோழி