குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 018

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

இரவில் வந்து மீளும் தலைவனிடம் தோழி “விரைவில் வரைந்து கொள்ள வேண்டும்” எனக் கூறியது.

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே! சாரல்
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது, காமமோ பெரிதே! . . . . [05]
- கபிலர்.

பொருளுரை:

மூங்கிலை வேலியாகக் கொண்டவிடத்தில், வேரில் பழக் குலைகள் தொங்கும் பலா மரங்கள் நிறைந்த மலைநாட்டுத் தலைவனே! விரைவில் தலைவியை மணம் செய்துகொள்ளும் காலத்தை உண்டாக்கிக் கொள்க! உன்னைத் தவிர யாரால் தலைவியின் இந்நிலையை அறிந்துகொள்ள முடியும்? மலையிலே, சிறிய கொம்புகளிலே பெரிய பலாப்பழம் தொங்கிக் கொண்டிருப்பதைப் போன்று, தலைவியின் உயிரோ மிகச்சிறியது. அவள் உன் மேல் கொண்ட விருப்பமோ பெரியது.

குறிப்பு:

கலித்தொகை 137-2 - பெரிதே காமம் என் உயிர் தவச் சிறிதே. நற்றிணை 232 - வேரல் வேலிச் சிறுகுடி. வேரல் வேலி (1) - உ. வே. சாமிநாதையர் உரை - சிறு மூங்கிலாகிய வாழ் வேலி உடைய, மலைச் சாரலில் இயல்பாகவே வளர்ந்த மூங்கிலே பலா மரத்திற்கு வேலியாயிற்று. இத்தகைய வேலையை வாழ்வேலி என்பர் (பெரும்பாணாற்றுப்படை 126 - வாழ் முள் வேலிச் சூழ் மிளைப் படப்பை, தமிழண்ணல் உரை - சிறு மூங்கில்களையே உயிர் வேலியாக உடைய. யார் அஃது அறிந்திசினோரே (3) - உ. வே. சாமிநாதையர் உரை - அந்நிலையை அறிந்தவர் யார்? ஒருவருமில்லை, பொ. வே. சோமசுந்தரனார் உரை - நின்னை அல்லால் பிறர் யாரே அதனை அறிந்து கொள்வார் உளர். சிறு கோடு (4) - இரா. இராகவையங்கார் உரை - சிறு கோடு என்பதனால் தலைவியினது இளமையும் மென்மையும் தெரிய வைத்தாள். பொ. வே. சோமசுந்தரனார் உரை - சிறு கொம்பில் பலாக்கனி பின்னும் பருத்து முதிருமாயின் அக்கொம்பினை முறித்துக்கொண்டு வீழ்ந்து சிதறுமாறு போலத் தலைவியின் காமம் பின்னும் முதிருங்கால் அவள் உயிருக்கு இடையூறு செய்து தானும் கெடும் என்பது உவமையாற் போந்தமை உணர்க. மதி - மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26). சின் - மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை - ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27). தவ - உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:

வேரல் வேலி - மூங்கில் வேலி, வேர்க்கோள் - வேரில் பழக் குலைகள் தொங்கும், பலவின் - பலா மரங்களையுடைய, சாரல் நாட- மலை நாட்டவனே, செவ்வியை - வரைந்து (மணம் செய்து கொள்ளும்) கொள்ளும் காலத்தை, ஆகுமதி- உண்டாக்கு, யார் அஃது அறிந்திசினோரே - யாரால் தலைவியின் இந்நிலையை அறிந்துகொள்ள முடியும், சிறுகோட்டு - சிறிய கொம்பிலே, பெரும்பழம் - பெரிய பலாப்பழம், தூங்கி ஆங்கு - தொங்கிக் கொண்டிருந்தவாறு, இவள்- தலைவி, உயிர் தவச் சிறிது - உயிர் மிகச் சிறியது, காமமோ பெரிதே - விருப்பமோ பெரியதே