குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 023

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தோழி அறத்தொடு நின்றது.

அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக்கோப்பு அன்ன நன் நெடும் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே!
இன்னும் பாடுக பாட்டே, அவர்
நன் நெடும் குன்றம் பாடிய பாட்டே . . . . [05]
- ஔவையார்.

பொருளுரை:

கடவுளை அழைத்துப் பாடும் கட்டுவிச்சியே! கடவுளை அழைத்துப் பாடும் கட்டுவிச்சியே! சங்கு மணியால் கோர்த்த கோவையைப் போன்ற நல்ல நீண்ட கூந்தலையுடைய கட்டுவிச்சியே! பாட்டுக்களைப் பாடுவாயாக! இன்னும் பாடுவாயாக, அவருடைய நல்ல உயர்ந்த குன்றைப் பற்றின பாட்டை!

குறிப்பு:

உ. வே. சாமிநாதையர் உரை - ‘அவர் நன் நெடும் குன்றம் பாடிய பாட்டு’ எனக் கூறின், ‘அவர் யார்?’ என்னும் ஆராய்ச்சி தாயரிடையே பிறந்து உண்மை அறிதற்கு ஏதுவாமாகலின் இஃது அறத்தொடு நிற்றலாயிற்று. பொ. வே. சோமசுந்தரனார் உரை - முருகவேள் உறைவதொரு மலையைப் பாடினாளாக அம்மலையே தலைவன் மலையுமாகலின், அப்பாடல் கேட்டுத் தலைவி மகிழ்வெய்தல் கண்ட தோழி, மீண்டும் அம்மலையையே பாடுக என்றாள். அகவன் மகளே (1) - உ. வே. சாமிநாதையர் உரை - தெய்வங்களை அழைத்துப் பாடுதலைச் செய்யும் கட்டுவிச்சியே, இரா. இராகவையங்கார் உரை - தெய்வங்களையும் குலத்தோரையும் அழைத்தலுடைய பெண்டே, திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - வெறியாடும் மகளே என்றும் வேலனை அழைக்கும் மகளே என்றும் உரைக்கலாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை - அழைக்கும் மகள், கட்டுவிச்சி குறி சொல்வழித் தெய்வங்களையும் குறி சொல்லப்படுவோர் குலத்தையும் அழைத்துப் பாடுதல் பற்றி அவளுக்கு அகவன் மகள் என்று பெயராயிற்று. கட்டு - உ. வே. சாமிநாதையர் உரை - முறத்தில் நெல்லை வைத்துத் தெய்வங்களைப் பாடி எண்ணிப் பார்த்துக் கட்டுவிச்சிக் காணும் குறி. பாட்டே - ஏகாரம் பிரிநிலை.

சொற்பொருள்:

அகவன் மகளே - கடவுளை அழைத்துப் பாடும் கட்டுவிச்சியே, அகவன் மகளே - கடவுளை அழைத்துப் பாடும் கட்டுவிச்சியே, மனவுக் கோப்பு அன்ன - சங்கு மணியால் ஆன கோவையைப் போன்ற, நன் நெடும் கூந்தல் - நல்ல நீண்ட கூந்தல், அகவன் மகளே - குறி சொல்லும் கட்டுவிச்சியே, பாடுக பாட்டே - பாட்டுக்களை பாடுவாயாக, இன்னும் பாடுக - இன்னும் பாடுவாயாக, பாட்டே - பாட்டை, அவர் நன் நெடும் குன்றம் பாடிய பாட்டே - அவருடைய நல்ல உயர்ந்த குன்றத்தைப் பற்றின பாட்டு