குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 346

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் மாலைப்பொழுதில் நம்மைப் பிரிந்து செல்ல வருந்துகின்றான்" என்று கூறும் வாயிலாக அவன் இரவுக்குறி விரும்புதலைத் தோழி தலைவிக்குக் கூறியது.

நாகு பிடி நயந்த முளைக் கோட்டு இளங் களிறு,
குன்றம் நண்ணி, குறவர் ஆர்ப்ப,
மன்றம் போழும் நாடன் - தோழி!
சுனைப் பூங் குவளைத் தொடலை தந்தும்,
தினைப் புன மருங்கில் படுகிளி ஓப்பியும், . . . . [05]

காலை வந்து, மாலைப் பொழுதில்
நல் அகம் நயந்து, தான் மயங்கிச்
சொல்லவும் ஆகாது அஃகியோனே.
- வாயிலிளங் கண்ணனார்.

பொருளுரை:

தோழி! இளம்பிடியை விரும்பிய மூங்கில் முளையைப்போன்ற கொம்பையுடைய இளைய களிறு மலையிடத்தே பொருந்தி அங்குள்ள குறவர் முழங்கியதனால் ஊரிடத்துள்ள மன்றத்தைப் போழ்ந்து செல்லும் நாட்டையுடைய தலைவன் பகலில் வந்து சுனையில் மலர்ந்த குவளை மலர்மாலையை நினக்குத் தந்தும் தினைக் கொல்லையினிடத்தில் வீழ்கின்ற கிளிகளை நம்மோடு ஓட்டியும் பிறகுவந்த மாலைக்காலத்தில் நல்லநெஞ்ச த்தின் கண்ணே ஒன்றை விரும்பி வருந்தி அக்கருத்தை வெளிப்படச் சொல்லவும் எழுச்சி பெறாமல் குறைவுற்றான்.

முடிபு:

தோழி, நாடன் காலைவந்து தந்தும் ஒப்பியும் மாலைப்பொழுதில் நயந்து உயங்கி அஃகியோன்.

கருத்து:

தலைவன் மாலைப்பொழுதின் கண்ணும் வரும் இரவுக்குறியை நயந்தான்; அதனைக் குறிப்பினால் அறிந்தேன்.